பவித்ரா ஜனனி, விஜய் டிவியின் ஒளிபரப்பான 'ஆபீஸ்' சீரியலில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து மெல்ல திறந்தது கதவு, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி, சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்தார். ஆனால் இவருக்கு சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு பல வருடங்கள் கழித்து, 'ஈரமான ரோஜாவே' சீரியலில் தான் கிடைத்தது. இந்த சீரியலில் இவரது எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.