காசுக்காக இங்க வரல; என் பிளானே வேற! விவசாயியாக பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்த ரஞ்சித்

First Published | Oct 6, 2024, 9:44 PM IST

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி உள்ள நடிகரும், இயக்குனருமான ரஞ்சித் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ranjith, Vijay Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அதகளமாக இன்று ஆரம்பமாகி உள்ளது. கடந்த 7 சீசன்களை காட்டிலும் இந்த சீசன் பல்வேறு புதுமைகளுடன் இந்த 8-வது சீசன் தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியை இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவந்த நிலையில், இம்முறை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். கமலுக்கு கச்சிதமான ஆள் விஜய் சேதுபதி என சொல்லும் அளவும் மிகவும் இயல்பாகவும் யதார்த்தமாகவும் தொகுத்து வழங்கி வருகிறார் விஜய் சேதுபதி.

Actor Ranjith

அந்த வகையில் இந்த சீசனில் ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதி, அவர்களை அன்போடு வரவேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். அந்த வகையில் பிக்பாஸ் போட்டியாளராக களமிறங்கியுள்ள நடிகரும், இயக்குனருமான ரஞ்சித்தை பார்த்ததும், பார்ப்பதற்கே புது மாப்பிள்ளை போல இருக்கிறீர்கள் சார் என சொல்லி வரவேற்ற விஜய் சேதுபதி, அவர் இயக்கிய படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்... வீட்டுக்கு நடுவே கோடு போட்டு கொளுத்தி போட்ட பிக்பாஸ்! உள்ளே வந்த வேகத்தில் வெளியே சென்ற 6 போட்டியாளர்கள்!


Director Ranjith

இதையடுத்து ரஞ்சித்தின் வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் விவசாயியாக எண்ட்ரி கொடுத்தார். பின்னணியில் நீ பொட்டு வச்ச தங்க குடம் பாடல் ஒலிக்க கிராமத்தில் தலையில் துண்டை கட்டிக் கொண்டு, வயல் வெளியில் அறுவடை செய்வது போல அந்த வீடியோவில் அசத்தில் இருந்தார் ரஞ்சித். பின்னர் பேசிய அவர், காசுக்காகவோ, அல்லது புகழுக்காகவோ இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வரவில்லை என கூறிய ரஞ்சித், மக்களின் அன்பை அறுவடை செய்யவே இந்த பிக்பாஸில் கலந்துகொண்டதாக கூறினார்.

Bigg Boss Tamil Season 8 Contestant Ranjith

ரஞ்சித் உடன் அவரது நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம் பேசிய விஜய் சேதுபதி வணக்கம் என சொன்னதும், ரஞ்சித்தின் நண்பர் சாப்டிங்களா என கேட்டதோடு, எங்க ஊர்ல இப்படிதான் கேப்போம் என சொன்னார். அதற்கு விஜய் சேதுபதி, எங்க ஊர்லயும் இந்த பழக்கமெல்லாம் இருக்குது... எங்க ஊருக்கு வர்றவுங்கல வெளிய போங்கன்னா சொல்லுவோம் என தக் லைஃப் ரிப்ளை ஒன்றை கொடுத்தார். அதேபோல் கவுண்டம்பாளையம் படம் எதிர்கொண்ட சர்ச்சை பற்றியும் ரஞ்சித்திடம் பேசினார் விஜய் சேதுபதி.

இதையும் படியுங்கள்... Bigg Boss Tamil Season 8 : எக்கச்சக்க கேள்விகளுடன் BB வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கும் VJ அனந்தி!

Latest Videos

click me!