அது மட்டுமில்லாமல் அவ்வப்போது திரைப்பட விமர்சகராகவும் பயணித்து வரும் ஆர்.ஜே ஆனந்தி ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான "கோமாளி" என்கின்ற திரைப்படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்து அசத்தியிருந்தார். தொடர்ச்சியாக பிகில், தாராள பிரபு, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.