உங்க ஷோவில் எனக்கு சான்ஸ் கிடைக்கல! விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்; ஷாக் ஆன தீபக்

First Published | Oct 6, 2024, 8:35 PM IST

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருக்கும் தொகுப்பாளர் தீபக் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Deepak, Vijay Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்கி உள்ளது. இந்நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒவ்வொருவராக அழைத்து அவர்களை நலம் விசாரித்து கையில் ஒரு டம்மி கோப்பையுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. அந்த வகையில் முதல் நான்கு போட்டியாளர்களாக ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா, தர்ஷா குப்தா, சத்யா ஆகியோர் சென்ற நிலையில், 5வது போட்டியாளராக தொகுப்பாளர் தீபக் எண்ட்ரி கொடுத்தார்.

Bigg Boss Tamil season 8 contestant Deepak

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தீபக்கை வரவேற்கும் போதே நானும் அவரோட பெரிய ரசிகன் என சொல்லி வரவேற்றார் விஜய் சேதுபதி. வந்த கையோடு அவரையே தொகுப்பாளராக மாற்றி அழகுபார்த்த விஜய் சேதுபதி, பின்னர் தீபக்கின் வீடியோவை திரையிட்டார். அதில் பேசிய தீபக். ஆரம்பத்தில் மாடலிங்கில் பணியாற்றி பின்னர் தொகுப்பாளராக மாறியதாக கூறிய அவர், அதன்பின்னர் தொகுப்பாளராகவே தன்னுடைய பயணத்தை தொடர்ந்ததாக கூறினார்.

இதையும் படியுங்கள்... டீச்சராக தொடங்கி குக்காக கலக்கிய தர்ஷா குப்தாவின் பிக்பாஸ் எண்ட்ரி - மனசிலாயோ பாட்டுக்கு செம குத்தாட்டம்!

Tap to resize

VJ Deepak

பின்னர் 2006-ம் ஆண்டு நடிகராக வேண்டும் என முயற்சித்து வந்ததாக கூறிய தீபக் சின்னத்திரையில் தனக்கு அடுத்தடுத்து நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், சினிமாவில் தான் நடித்த படங்கள் எல்லாம் பாதியில் நின்றுபோனதால் தன்னுடைய கெரியரில் பின்னடைவை சந்தித்ததாக கூறி ஃபீல் பண்ணி இருந்தார் தீபக். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஒரு கம்பேக் நிகழ்ச்சியாக இருக்கும் என நம்புவதாக தொகுப்பாளர் தீபக் கூறி இருந்தார்.

Deepak Dinkar

இதையடுத்து பேசிய விஜய் சேதுபதி, தான் உங்களின் மிகப்பெரிய ரசிகன் என்று கூறியதோடு, நீங்களும், டிடியும் சேர்ந்தால் கலக்கி விடுவீர்கள். என்னோட பேவரைட் காம்போவும் நீங்க தான். நீங்கள் தொகுத்து வழங்கிய ஜோடி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் முயற்சித்தேன். ஆனால் எனக்கு அப்போ சான்ஸ் கிடைக்கவில்லை என விஜய் சேதுபதி சொன்னதும் அனைவரும் ஷாக் ஆகிவிட்டனர். அன்று மிஸ் ஆன அந்த சான்ஸ் இன்று அவரை எந்த உயரத்தில் தூக்கி வந்து நிறுத்தி இருக்கிறது என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Bigg Boss Tamil : NSK குடும்பத்தில் இருந்து பிக் பாஸுக்குள் செல்லும் சத்யா - டிராபி கொடுத்தனுப்பிய VJS!

Latest Videos

click me!