Bigg Boss Tamil: டீச்சராக தொடங்கி குக்காக கலக்கிய தர்ஷா குப்தா - 2.3 மில்லியன் பாலோயர்ஸ் கேட்டு மெர்சலான VJS!

First Published | Oct 6, 2024, 8:02 PM IST

Bigg Boss Tamil Dharsha Gupta: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 3ஆவது போட்டியாளராக பியூட்டி குயீன் தர்ஷா குப்தா கலந்து கொண்டார். முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Tamil Season 8 Vijay Sethupathi

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 3ஆவது போட்டியாளராக பியூட்டி குயீன் தர்ஷா குப்தா கலந்து கொண்டார். முதல் முறையாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்தி வழங்கி வருகிறார். கடந்த 7 சீசன்களாக உங்களில் ஒருவனாக இருந்த உலக நாயகன் தொகுத்து வழங்கினார். தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ரூ.60 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்டோபர் 6ஆம் தேதியான இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கோலாகலமாக தொடங்கியது. இந்த ஷோவின் முதல் போட்டியாளராக பிரபல தயாரிப்பாளரும், யூடியூப் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொண்டார். இவரைத் தொடர்ந்து 2ஆவது போட்டியாளராக மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா நேமிதாஸ் கலந்து கொண்டார்.

Dharsha Gupta Bigg Boss Tamil Season 8 Third Contestant

இவர்களது வரிசையில் 3ஆவது போட்டியாளராக தர்ஷா குப்தா கலந்து கொண்டார். இவரைப் பற்றிய அறிமுகம் யாருக்கும் தேவையில்லை என்றாலும், பலருக்கும் தெரியாத இவரது முகம் ஒன்று உள்ளது. சீரியல்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக அதிகளவில் பிரபலமானார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 2.3 மில்லியன்.

கிளாமரான உடையில் காத்தெல்லாம் காதலாக என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். அதன் பிறகு வேட்டையன் படத்தில் இடம் பெற்றுள்ள மனசிலாயோ என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். பிறந்து வளர்ந்தது எல்லாம் கோயம்புத்தூர். 1994 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி கோயம்புத்தூரில் பிறந்திருக்கிறார். வீட்டிற்கு செல்லப் பிள்ளையும் கூட. அப்போ சுட்டித்தனம் இருக்கும். அதுபோன்று ஒரு பெண்.


Dharsha Gupta Profile

எப்போதும் சுறுசுறுப்பாகவும் இருப்பவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். கற்றுக் கொடுப்பதில் ஆர்வம் கொண்ட தர்ஷா குப்தா ஆரம்பத்தில் ஒரு ஆசிரியையாக வேலையை தொடங்கியிருக்கிறார். ஸ்கூலில் டீச்சராக இருந்த போது மற்ற டீச்சர்களின் டிரெஸிங்கை பார்த்து அது போன்று டிரெஸ் போட வேண்டும் என்று ஆசை வந்துள்ளது. அதற்காக சென்னை வந்து ஃபிரண்ட் வீட்டில் தங்குகிறார். பக்கத்து வீட்டுக்காரங்க உதவியின் மூலமாக மீடியாவில் எண்ட்ரி கொடுத்த தர்ஷா குப்தா சீரியலில் ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்.

Dharsha Gupta Bigg Boss Tamil Season 8

ஆனால், அந்த சீரியலில் அவரது நடிப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதன் பிறகு லாக்டவுன் வரவே, அதில் நாள்தோறும் மாலை 6 மணிக்கு வீடியோ, ரீல்ஸ் போட்டு போட்டு டிரெண்டாகியிருக்கிறார். இதன் மூலமாக குக் வித் கோமாளியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனாலும் இந்நிகழ்ச்சியின் மூலமாகவும் போதிய வாய்ப்பு இல்லாத நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 3ஆவது போட்டியாளராக வந்துள்ளார். இந்த சீசனில் அவர் ஜெயிப்பாரா? தர்ஷா குப்தா ஆர்மி உருவாகுமா? என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்….

Latest Videos

click me!