பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சற்று முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது. ஏற்கனவே, பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகி இருந்தாலும், தற்போது பிக்பாஸ் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி உள்ளே அனுப்பி வைக்கிறார் விஜய் சேதுபதி.
முதல் போட்டியாளராக, பிரபல போட்டியாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்ற நிலையில்.. இரண்டாவது போட்டியாளராக சாச்சனா நேமிதாஸ் உள்ளே சென்றுள்ளார். இவர் கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான, 'மகாராஜா' படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலமானார். குறிப்பாக சாச்சனா நேமிதாசின் எதார்த்தமான நடிப்பு பல ரசிகர்களை கவர்ந்தது.