அதன் பிறகு பிக்பாஸ் வீட்டிற்கு காலடி எடுத்து வைத்தார். இந்த வீடு எல்லோருக்கும் பொதுவானது. இதுதான் கார்டன் ஏரியா. இங்க காதலிச்சிருக்காங்க, கைய பிடிச்சிருக்காங்க, கண்ண கசக்கியிருக்காங்க, பிளான் பண்ணிருக்காங்க, இப்போ வரப்போகும் போட்டியாளர்கள் என்ன பண்ணுறாங்க என்று பார்க்கலாம் என்றார்.
இதையடுத்து விஜய் சேதுபதியை பிக்பாஸ் வரவேற்றார். விஜய குருநாத சேதுபதி என்று அழைத்த பிக்பாஸ் அதன் பிறகு சேது சார் என்று குறிப்பிட்டார். வீட்டிற்குள் சூழ்ச்சி என்பதை புரிந்து கொண்ட சேதுபதி, பாதுகாப்பாக விளையாடுவார்கள் என்று நம்புவதாக கூறினார். வீட்டிற்குள் முதலில் கிச்சனுக்கு சென்றார். வீட்டை சுற்றிக் காட்டிய விஜய் சேதுபதி முதல் போட்டியாளராக ரவீந்தர் சந்திரசேகரை வரவேற்றார்.