"கேஸ் முடியட்டும்; அப்புறம் பார்க்கலாம்" ஜானி மாஸ்டரின் தேசிய விருதுக்கு விதிக்கப்பட்ட தடை!

First Published | Oct 6, 2024, 5:40 PM IST

Dance Master Jani : பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி, தனது தேசிய விருதை பெறுவதற்காக அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார்.

Jani Master

ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் நடன இயக்குனர் ஷேக் ஜானி பாஷா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி சிறை சென்றார். அவருடன் உதவி டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர் தான் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஜானி மாஸ்டர் தரப்பில் கடந்த சில நாள்களாக.. அந்த பெண் தான், தன்னை காதலித்தாகவும், தான் திருமணமானவன் என்று தெரிந்தும், தன்னை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் தான், தன் மீது வீண் பலி சுமத்துவதாகவும் கூறினார்.

5 முறை வாலியின் வரிகளுக்கு NO சொன்ன கமல் - 6வது முறை கடுப்பில் எழுதி மெகா ஹிட்டான பாடல் எது தெரியுமா?

Jani Master National Award

இந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதலமைச்சராக பணியாற்றி JSP கட்சியின் தலைவர் பவன் கல்யாண் முன்னிலையில், ஜானி அதிகாரப்பூர்வமாக ஜன சேனா கட்சியில் (ஜேஎஸ்பி) இணைந்தார். ஆனால் சில மாதங்கள் கழித்து ஜானி மீது பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தவிர்க்குமாறு ஜானிக்கு ஜேஎஸ்பி அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜானி மாஸ்டரின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தான், அவர் மீது இப்படி வீண் பலிகளை சுமத்தி வருவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார் ஜானி மாஸ்டரின் மனைவி. மேலும் அந்த பெண் பல ஆண்டுகள் கழித்து இப்பொது என் கணவர் மீது புகார் அளிக்க என்ன காரணம் என்றும் கேட்டிருந்தார் அவர்.

Tap to resize

Jani Master

இப்படி ஜானி மாஸ்டரின் வழக்கு பல திடுக்கிடும் விஷயங்களுடன் நகர்ந்த நிலையில் தான் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் வரும் "மேகம் கருக்காத பெண்ணே பெண்ணே" என்ற பாடலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. மேலும் தேசிய திரைப்பட விருதுகளில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் பெற்றார் ஜானி. ஆனால் அவர் ஜாமீன் பெற்று விருதுவழங்கும் விழாவுக்கு தயாராகி வரும் நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் நடந்துகொண்டிருக்கும் சட்ட நடவடிக்கைகள் காரணமாக அவரது விருது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ரங்காரெட்டி நீதிமன்றம், அக்டோபர் 11ஆம் தேதி சரணடைய வேண்டும் என்ற நிபந்தனையுடன், தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அக்டோபர் 6 முதல் 10ஆம் தேதி வரை அவருக்கு ஜாமீன் வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Megam Karukatha Penne Song

ஆனால்.. இன்று வெளியான ஒரு அறிக்கையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய திரைப்பட விருதுகள் பிரிவு, ஜானி மாஸ்டர் குறித்த குற்றச்சாட்டுகள் வருவதற்கு முன்பே அவருக்கும் மற்றவர்களுக்கும் தேசிய திரைப்பட விருதுகளுக்காக அனுப்பப்பட்ட அழைப்புகள் வெளியிடப்பட்டன. திரைப்பட விழா இயக்குனரகத்தின் துணை இயக்குநர் இந்திராணி போஸ் கையொப்பமிட்ட உத்தரவில், “குற்றச்சாட்டின் தீவிரம் மற்றும் விவகாரம் கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, சிறந்த நடன அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருதை நிறுத்தி வைக்க தகுதி வாய்ந்த ஆணையம் முடிவு செய்துள்ளது. 

மறு உத்தரவு வரும் வரை புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கான அவரது அழைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய 2 ரியாலிட்டி ஷோக்களின் கதை என்ன ஆச்சு தெரியுமா?

Latest Videos

click me!