அவர் பெற்ற ஐந்து தமிழக அரசின் மாநில விருதுகளில் இரண்டு விருதுகள் கமல்ஹாசனின் திரைப்படங்களுக்காக கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு கவிஞர் வாலிக்கு "பத்மஸ்ரீ" பட்டமும் வழங்கப்பட்டது. தன்னுடைய வாழ்நாளில் "அம்மா", "அவதார புருஷன்", "நானும் இந்த நூற்றாண்டும்", "பாண்டவர் பூமி", "ராமானுஜ காவியம்", "கிருஷ்ண காவியம்", "தமிழ் கடவுள்", "கலைஞர் காவியம்" என்று பதினைந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி அசத்தியவர் பாலி என்றால் அது மிகையல்ல.
பொதுவாக பாடல் ஆசிரியர்கள் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள். ஆனால் ஒரு பாடலாசிரியராக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய வாலி, கடந்த 1983ம் ஆண்டு தமிழில் வெளியான "பொய்க்கால் குதிரை" என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் "சத்யா" மற்றும் "ஹேராம்" உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று அவர் நடித்திருந்தார். அதன்பிறகு கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "பார்த்தாலே பரவசம்" என்ற திரைப்படத்திலும், 2002 ஆம் ஆண்டு வெளியான "காதல் வைரஸ்" என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் அவர் ஏற்று நடத்திருந்தார்.