வேற ஆளே கிடைக்கலயா பாஸ்! பிக்பாஸ் 8-ல் விஜய் டிவி பிரபலங்கள் மட்டும் இத்தனை பேரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாக உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் விஜய் டிவி பிரபலங்களாக உள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் இன்று கோலாகலாக தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியை முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார். அவர்களுக்கான அறிமுக விழா ஷூட்டிங் நேற்றே முடிவடைந்த நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இந்த 18 போட்டியாளர்களில் 13 பேர் விஜய் டிவி பிரபலங்கள். அவர்கள் யார்.. யார் என்பதை பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் 5 சீரியல் நடிகைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் நடிகை தர்ஷா குப்தா விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியல் மூலம் அறிமுகமானவர். அதேபோல் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்துகொண்டவர் ஆவார். அதேபோல் விஜய் டிவியில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து பின்னர் தேன்மொழி என்கிற சீரியலில் ஹீரோயினாக நடித்த நடிகை ஜாக்குலினும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... ஆளும் ரெடி; ஆட்டமும் ரெடி! பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அந்த 18 பேர் இவங்க தான் - முழு லிஸ்ட் இதோ
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மற்றும் ராஜா ராணி சீரியலில் சைடு ரோலில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பின்னர் ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக கலக்கிய பவித்ரா ஜனனியும் பிக்பாஸில் பங்கேற்றுள்ளார். இதுதவிர அன்ஷிதா மற்றும் தர்ஷிகா ஆகிய இருவரும் விஜய் டிவி சீரியல் நடிகைகள் தான். இதில் அன்ஷிதா செல்லம்மா சீரியலிலும், தர்ஷிகா பொன்னி சீரியலிலும் நடித்துள்ளார்.
சீரியல் நடிகைகளுக்கு நிகராக 6 சீரியல் நடிகர்களும் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அதன்படி விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் நாயகனாக நடித்த ரஞ்சித், செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னவ், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நீலக்குயில் தொடரின் நாயகன் சத்யா, பாரதி கண்ணம்மா சீரியல் ஹீரோ அருண் பிரசாத், தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகன் தீபக், பாக்கியலட்சுமி சீரியலில் எழிலாக நடித்த விஜே விஷால் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
இதுதவிர விஜய் டிவி நடன நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தவரும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிவருபவருமான சுனிதாவும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கெடுத்து உள்ளார். இறுதியாக விஜய் டிவியில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தமிழ்பேச்சு எங்கள் மூச்சு என்கிற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்னுடைய தமிழ் புலமையை வெளிப்படுத்திய முத்துக்குமாரும் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை ஏன் பார்க்க வேண்டும்? 5 காரணங்கள் என்ன?