
ரசிகர்களை மதிக்க தெரிந்த விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இன்று மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் 15 முதல் 18 போட்டியாளர்கள் இன்றைய நிகழ்ச்சியின் மூலமாக பிக்பாஸ் வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பார்கள். பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் முதல் போட்டியாளர் யார், கடைசி போட்டியாளர் யார்? வீடு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இப்பவே ஆவலாக இருக்கிறது.
காரணம் 1: - விஜய் சேதுபதி
சரி அதெல்லாம் இருக்கட்டும் ஏன், இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்? அதற்கான காரணங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். முதல் காரணமே பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது தான். இது அவரது முதல் ரியாலிட்டி ஷோ என்று நீங்கள் நினைத்தால் அது தான் இல்ல. இதற்கு முன்னதாக நம்ம ஊரு ஹீரோ மற்றும் மாஸ்டர் செஃப் இந்தியா தமிழ் என்று 2 ரியாலிட்டி ஷோக்களை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருக்கிறார்.
இந்த 2 ஷோவுமே சன் தொலைக்காட்சி தான் ஒளிபரப்பு செய்தது. ஒரு சீசனுக்கு பிறகு அதோடு அந்த ரியாலிட்டி ஷோவிற்கு சன் டிவி முழுக்கு போட்டுவிட்டது. நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியானது 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 16 எபிசோடுகளை கடந்தது. அதன் பிறகு அந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை சன் டிவி ஒளிபரப்பு செய்யவில்லை. இது விஜய் சேதுபதியின் முதல் ரியாலிட்டி ஷோ.
அதன் பிறகு 2 ஆண்டுகளுக்கு மீண்டும் 2ஆவது முறையாக சன் டிவியுடன் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் தமிழ் என்ற ரியாலிட்டி ஷோவிற்காக இணைந்தார். முழுக்க முழுக்க சமையல் நிகழ்ச்சியை மையப்படுத்திய இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். 2021 ஆம் ஆண்டு ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியானது 30 எபிசோடுகள் வரை சென்றது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்கும் சன் டிவி முழுக்கு போட்டது.
காரணம் 2 – விஜய் டிவி
தற்போது முதல் முறையாக விஜய் டிவி பக்கம் விஜய் சேதுபதி திரும்பியிருக்கிறார். இதுவரையில் கமல் ஹாசனை வைத்து 7 சீசன்களை வெற்றிகரமாக ஓட்டிய விஜய் டிவி தற்போது முதல் முறையாக விஜய் சேதுபதியை உள்ளே கொண்டு வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கமல் ஹாசனுக்கு இருக்கும் வரவேற்பு விஜய் சேதுபதிக்கு கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி எந்தமாதிரியான காஸ்டியூம் அணிந்து வருவார், எப்படியெல்லாம் பேசுவார் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது. யாருக்கெல்லாம் முத்தம் கொடுப்பார் என்பதையும் அறிய ஆவல். பொழுது போக்கிற்கான ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். விஜய் சேதுபதி அருமையாக பேசக் கூடியவர். ரசிகர்களுக்கு நெருக்கமானவர். எதார்த்தமன மனிதர். ஆதலால், அவருக்காக இந்த நிகழ்ச்சியை பார்க்கலாம்.
காரணம் 3 – அரசியல் இருக்காது
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் இதில் அரசியல் இருக்காது. இதுவரையில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் அரசியல் கலவை இருந்தது. காரணம், அவர் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இனிமேல் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதால் அதில் அரசியல் பேச்சு இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் 4: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்கள்:
காலமும், நேரமும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் டெக்னாலஜி இல்லாமல் மனிதனால் எப்படி வாழ முடியும்? என்பதற்கான அடையாளமாக இந்த 100 நாட்கள் இருக்க போகிறது.
மொபைல் போன் இல்லாமல், வெளியுலகம் தெரியாமல் இருக்க போகும் அந்த 18 போட்டியாளர்கள் யார் யார் என்பதை அறிந்து கொள்ள ஆசையாக இருக்கிறது. அவர்களில் உங்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் கூட இருக்கலாம். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு அவர்கள் உங்களுக்கு பிடித்தமானவர்களாக கூட மாறலாம்.
காரணம் 5: பிக்பாஸ் தமிழ் சீசன் 8 பாடல்கள்
மேலும் அந்த 100 நாட்களும் எந்த மாதிரியான பாடல்கள் ஒலிக்கப்படும். நீ போட்டு வச்ச தங்க குடம் பாடல் யாருக்கும் போடப்படும்? என்பதையெல்லாம் அறிந்து கொள்ள வேண்டாமா? யார் யாரை காதலிப்பார்கள், அண்ணன் தம்பி உறவு, அண்ணன் – தங்கை உறவு, அம்மா, அப்பா உறவு என்று எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியாளர்களாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், கானா பாடகர் ஜெஃபி, நடிகை தர்ஷா குப்தா, நடிகர் ரஞ்சித், ஆர்ஜே ஆனந்தி, சீரியல் நடிகை அன்ஷிதா, நடிகை ஐஸ்வர்யா, சீரியல் நடிகர் தீபக், சச்சனா நமிதாஸ், தர்ஷிகா, சவுந்தர்யா நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு திரைக்கு வந்த மகாராஜா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை பார்ட் 2, காந்தி டாக்கீஸ், ஏஸ், டிரைன், பிசாசு 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து உருவாகி வருகிறது. இனிவரும் படங்கள் இந்த 100 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ.60 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கமல் ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது.