தமிழ் திரையுலகை பொறுத்த வரை கடந்த 1975 ஆம் ஆண்டு வெளியான "அபூர்வராகங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை பயணத்தை தொடங்கியவர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்துக்கு அறிமுகத்தை கொடுத்தவர் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் என்றால், ரஜினிகாந்தின் நடிப்புத் திறமையை மிக அழகாக வெளிப்படுத்தியவர் இயக்குனர் மகேந்திரன். அதே போல ஒரு ஆக்சன் நடிகராக ரஜினிகாந்தை பல திரைப்படங்களில் வெளிக்காட்டியவர் எஸ்.பி முத்துராமன். இப்படி இயக்குனர்களின் நடிகராக கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் ரஜினிகாந்திற்கே சவால் விடுக்கும் வகையில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளியானது ஒரு படம்.
அந்த திரைப்படத்தின் இயக்குனர், அதுவரை ரஜினியை அனைவரும் பார்த்த விதத்தில் இருந்து வேறொரு கண்ணோட்டத்தில் பார்த்தார் என்றால் அது மிகையல்ல. அதாவது ஸ்டைல் இல்லாமல், பன்ச் டைலாக் இல்லாமல் ரஜினியை வைத்து ஒரு படம் எடுத்தார்.