உலக அளவிலான டாப் 25 ஹாரர் படங்கள்.. 2ம் இடத்தில் மம்மூக்காவின் பிரமயுகம் - லிஸ்டில் தமிழ் படம் இருக்கா?
Ansgar R |
Published : Oct 05, 2024, 07:56 PM IST
Bramayugam Movie : பிரபல நடிகர் மம்மூட்டி நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் தான் பிரமயுகம். அந்த படத்திற்கு இப்பொது பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஒரு காலத்தில் மலையாள திரைப்படங்கள் என்றாலே முகம் சுளிக்கப்பட்ட காலங்களும் இருந்திருக்கிறது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மலையாள சினிமாவின் வளர்ச்சி இந்திய சினிமாவை தாண்டி, உலக சினிமாவையே வியக்க வைத்திருக்கிறது என்றால் அது சற்றும் மிகையல்ல. காரணம் அந்த அளவிற்கு மிக நேர்த்தியான திரைப்படங்களை எடுக்கும் இயக்குனர்களின் எண்ணிக்கை மலையாளத் திரையுலகில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
மிகவும் சிக்கலான பல கதை அம்சம் கொண்ட திரைப்படங்களை வெளியிடுவதில் மலையாள திரையுலக இயக்குனர்களுக்கு இணை அவர்களே இன்று சொல்லும் அளவிற்கு, இன்று மிகச்சிறந்த சினிமா துறையாக மோலிவுட் பயணித்து வருகிறது. இந்த மலையாள திரை உலகில் பல முன்னணி நடிகர்கள் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறி இருக்கின்றனர். அதில் முக்கியமானவர் மம்மூட்டி. கடந்த 1971 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான "அனுபவங்கள் பாலிசிகள்" என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை அவர் தொடங்கினார்.
திரையுலகில் அவர் அறிமுகமான 10 ஆண்டுகளில் மலையாள திரை உலகின் முன்னணி நடிகராக பயணிக்க தொடங்கினார் மம்மூட்டி. ஒரு கட்டத்தில், வருடத்திற்கு 33 திரைப்படங்கள் வரை நடித்து பெரும் சாதனை படைத்தவர் அவர். ஒரு நாளில் நான்கு, ஐந்து சூட்டிங்கில் நடிக்கும் மம்மூட்டி, அவர் பயணிக்கும் நேரத்திலேயே அடுத்த அடுத்த படத்தின் காட்சிகளுக்காக தயாரிப்புகளை மேற்கொண்டு பயணிப்பார் என்று பலர் சொல்லியுள்ளனர்.
அவர் மலையாள திரை உலகில் அறிமுகமாகி 53 ஆண்டுகள் கடந்து விட்டது என்றாலும் கூட, இன்றளவும் மலையாள திரை உலகை பொறுத்தவரை அவரே சூப்பர் ஸ்டார். அது மட்டுமல்ல 73 வயதை கடந்து விட்டார் என்றாலும் கூட, புதிது புதிதாக கதை களங்களை தேர்வு செய்து நடித்து வரும் அவருடைய ஆர்வம் இன்றும் குறையவில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "காதல் தி கோர்" என்ற திரைப்படம். அப்படத்தில் மம்மூட்டி ஒரு ஓரினச் சேர்க்கையாளராக நடித்து அசத்தியிருப்பார்.
34
Mollywood Actor
நிச்சயம் புகழின் உச்சியில், 50 ஆண்டுகால சினிமா அனுபவம் உள்ள ஒரு நடிகர் அப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க முன்வருவர்களாக என்பது சந்தேகமே. ஆனால் தன்னிடம் வரும் கதாபாத்திரங்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் சிறப்பாக நடித்து வருகின்றார் மம்மூட்டி என்று தான் கூறவேண்டும்.
இந்த 2024 ஆம் ஆண்டில் அவருடைய மூன்று திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், பஜூக்கா மற்றும் டோமினிக் ஆகிய திரைப்படங்களிலும் அவர் நடித்து விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி வெளியான மம்மூட்டியின் திரைப்படம் தான் "பிரம்மயுகம்". முழுக்க முழுக்க பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளாக, சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுத்த திரைப்படம் இது.
44
Mollywood Actor mammootty
வெகுநாட்கள் கழித்து ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இப்படத்தில் தோன்றியிருந்தார். ஒரு பிரபல நாவல் ஒன்றை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில், சக்கரவர்த்தியின் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் தற்பொழுது பன்னாட்டு அங்கீகாரம் ஒன்றை பெற்று இருக்கிறது.
உலக அளவில் புகழ்பெற்ற Lettet Boxd என்ற நிறுவனம், உலக அளவில் உள்ள 25 ஹாரர் திரைப்படங்களை பட்டியலிட்டு இருக்கிறது. இந்திய சினிமாவை தாண்டி உலக சினிமா துறையை சேர்ந்த பன்னாட்டு படங்கள் இதில் பங்கேற்றுள்ளது. இதில் "பிரம்மயுதம்" திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறது அதுமட்டுமல்ல பாலிவுட் உலகில் வெளியான Stree 2 என்ற திரைப்படமும் இந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. இந்த இரண்டு திரைப்படங்களை தவிர வேறு எந்த இந்திய திரைப்படமும் இந்த டாப் 25 பட்டியலில் இடம் பெறவில்லை. இரண்டாம் இடத்தை பிரமயுகம் பிடித்த நிலையில், 23ஆம் இடத்தை பிடித்திருக்கிறது Stree 2 என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.