அவமானப்படுத்தப்பட்ட செந்தில்.. வைராக்கியத்தோடு காத்திருந்து உதவிய பாக்கியராஜ் - ஒரு காமெடியனின் கதை!

First Published Oct 5, 2024, 6:25 PM IST

Actor Senthil : நகைச்சுவையில் தமிழகத்தின் லாரல் மற்றும் ஹார்டி என்பர் புகழப்பட்ட ஒரே நகைச்சுவை ஜோடி தான் செந்தில் மற்றும் கவுண்டமணி.

Actor Senthil

தமிழ் சினிமாவில் 1980களின் துவக்கத்தில் இருந்து 1990களின் இறுதிவரை கொடிகட்டி பறந்த உச்ச நடிகர்களில் செந்திலும் ஒருவர். ஒரு படத்தின் கதாநாயகனிடம் கால் சீட் வாங்குவதற்கு முன்பாக, செந்திலிடம் கால் ஷீட் வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அப்போது இருந்தது. காரணம் அந்த அளவிற்கு அவர் ஒரு பிசியான நடிகராக வலம்வந்தார். 1985ம் ஆண்டு தொடங்கி 1999 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 திரைப்படங்கள் வரை நடித்து புகழின் உச்சியில் வளம் வந்தவர் செந்தில். கவுண்டமணி மற்றும் செந்தில் ஜோடி தமிழ் சினிமா உலகில் மிகச்சிறந்த காமெடி ஜோடியாக பல ஆண்டுகளாக திகழ்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் உலகை கலக்கிய லாரல் மற்றும் ஹார்டி ஜோடி போல மிகசிறந்த காமடி ஜோடியாக தமிழ் சினிமாவை ஆண்ட இரு மன்னர்கள் இவர்கள் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. கவுண்டமணி மற்றும் செந்தில் கூட்டணியில் மட்டும் 100க்கும்  மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. கரகாட்டக்காரன் படம் வெளியாகி 36 ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனாலும் அந்த வாழைப்பழ காமெடிக்கு நிகர் அந்த காமடியே. 

Ajith Kumar Travel Video: பயணம் ஒன்றே ஒருவரை நல்ல மனிதராக்கும் – அஜித் குமார் வெளியிட்ட டிராவல் வீடியோ!

Karakattakaran

இன்றளவும் இவர்களுடைய காமெடிகள் காலம் கடந்தும் பலரால் ரசிக்கப்பட்டு வருவதை இந்த இரண்டு மாமேதைகளின் திறமையின் உதாரணம் என்றால் அது மிகையல்ல. ஆனால் எந்த ஒரு வாய்ப்பும் யாருக்கும் எளிதில் கிடைத்து விடாது என்று சொல்லுவதைப் போல தான், நடிகர் செந்திலின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய சோகங்கள் ஏற்பட்டிருக்கிறது. 1979 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "ஒரு கோயில் இருதீபங்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார் நடிகர் செந்தில். ஆனால் அதற்கு முன்னதாகவே பல மேடை நாடகங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே முடி கொட்டும் பிரச்சினை இருந்ததால் 30 வயதை தொடும் முன்பே தன் தலையில் இருந்த பாதி முடியை இழந்த செந்தில், அந்த ஒரு விஷயத்திலேயே, மிகப்பெரிய திறமை இருந்தும் பெரிய அளவில் கேலி செய்யப்பட்டுள்ளார்.

Latest Videos


Senthil

1979ம் ஆண்டுக்கு முன் நடிகர் செந்தில் நாடகங்களில் நடித்து வந்த காலத்தில் பலர் அவரை கேலி செய்து வந்துள்ளனர். நாடகத்தில் சிறப்பாக அவர் நடித்தாலும், ஓய்வு நேரத்தில், அவருடைய பணியாற்றும் பெரிய நடிகர்கள் "டேய் சொட்ட போய் டீ வாங்கிட்டு வாடா" என்று தான் பேசுவர்களாம். இப்படி அடிக்கடி உருவாக் கேலி செய்யப்பட்டாலும், தன்னுடைய சினிமா வாழ்க்கையை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு, அவர்கள் பேச்சை எல்லாம் பொறுத்துக்கொண்டு அவர்கள் தரும் பணிகளை மறுக்காமல் செய்வாராம். இப்படிப்பட்ட நேரத்தில் தான் நடிகர் செந்தில் நடிக்கும் நாடகங்களில் கதை வசனம் எழுத வந்துள்ளார் இயக்குனர் பாக்யராஜ்.  

அப்படி ஒரு பாக்கியராஜ் சென்ற நாடகத்திற்கு செந்திலும் வந்துள்ளார், அவருடைய நடிப்பை பார்த்து அசந்துள்ளார். ஆனால் அதன் பிறகு தான் அவரை பலரும் கேலி செய்வதை கண்டு மிகவும் மனம் நொந்துபோயுள்ளார். அதை கண்டு கடுப்பான பாக்கியராஜ், என்றாவது ஒருநாள் நான் திரைப்பட இயக்குனராக மாறும்போது நிச்சயம் இந்த திறமைசாலிக்கு வாய்ப்பு தரவேண்டும் என்று மிகவும் வைராக்கியத்துடன் இருந்துள்ளார்.

Senthil Son

அதேபோல இயக்குனர் பாக்யராஜ் தமிழ் திரை உலகில் இயக்குனராக களம் இறங்கிய பிறகு "தூறல் நின்னு போச்சு", "இன்று போய் நாளை வா" மௌன கீதங்கள் என்று தொடர்ச்சியாக தன்னுடைய திரைப்படங்களில் நல்ல பல கதாபாத்திரங்கள் கொடுத்து அவர்களுடைய உயரத்திற்கு உதவியிருக்கிறார். சுமார் 44 ஆண்டுகால திரை பயணத்தி, செந்தில் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை. தமிழ் சினிமாவின் மறுக்க முடியாத ஒரு லெஜென்டாக வலம்வருகிறார் அவர். மிக பெரிய நடிகரான செந்திலின் மூத்த மகன் மணிகண்ட பிரபு இன்று சென்னையில் சிறந்த பல் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். அதுமட்டுமல்ல தேவைப்படும் பலருக்கும் இலவச சிகிச்சையும் அளித்து வருகின்றார் அவர்.

நடுரோட்டில் நடந்த சம்பவம்.. கடவுள் போல் வந்து கவிஞர் வாலிக்கு உதவிய டாட்டா!

click me!