Ajith Kumar: பயணம் ஒன்றே ஒருவரை நல்ல மனிதராக்கும் – அஜித் குமார் வெளியிட்ட டிராவல் வீடியோ!

First Published | Oct 5, 2024, 6:20 PM IST

Ajith Kumar Venus Motorcycle Tours: பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வமுள்ள நடிகர் அஜித் குமார், தனது சுற்றுலா நிறுவனமான வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் மூலம் பயணம் ஒருவரை நல்ல மனிதராக்கும் என்பதை வலியுறுத்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ajith Kumar Travel Video

பைக் மற்றும் கார் ரேஸில் ஆர்வம் கொண்ட அஜித் குமார் பயணம் ஒன்றே ஒருவரை நல்ல மனிதராக்கும் என்று அவர் வெளியிட்ட டிராவல் வீடியோவில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் கார் மற்றும் பைக் ரேஸராக இருக்கும் நடிகர்களின் பட்டியலில் அஜித் மட்டுமே முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு இணை வேறு யாருமில்லை. அதுமட்டுமின்றி சட்டத்தை மதிப்பவர்களில் அஜித் தான் முதலிடம். பைக்கில் எங்கு சென்றாலும் சரி, காரில் சென்றாலும் சரி ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பார்.

ரசிகர்களுக்கு நடிகர் அஜித்தின் அட்வைஸ்!! | AK பேசியது என்ன? - Watch Asianet News Tamil Video

Ajith Kumar Video

எப்போதும் சாகசம் மற்றும் சாகச பயணத்தை விரும்பும் அஜித் தற்போது உலகம் முழுவதும் பயணம் செய்ய இருப்பதாகவும், கார் ரேஸ் போட்டியில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியா முழுவதும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்துவிட்டார். தனது திறமையால் முன்னுக்கு வந்த நடிகர். ரசிகர்களை மதிக்க தெரிந்த நல்ல மனிதர். இதுவரையில் எந்த சர்ச்சையிலும் சிக்காத தனது வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர். இப்படியெல்லாம் பல அடைமொழிகளை கொண்டு வாழும் அஜித் குமார் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ என்ற படங்களில் நடித்து வருகிறார்.

Tap to resize

Ajith Kumar

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்துடன் முடிந்தது. அண்மையில் அஜர்பைஜானில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். தொலை தூர பயணங்கள் மீது ஆர்வம் கொண்ட அஜித் சுற்றுலா பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர்ஸ் என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். பைக் மற்றும் காரில் பயணம் சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்த நிறுவனதை அணுகலாம்.

Ajith Kumar

இந்தியா முழுவதும் எத்தனையோ சுற்றுலா தளங்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பாதுகாப்பான பயணத்தின் மூலமாக மேற்கொள்ள அஜித் குமாரின் இந்த வீனஸ் சுற்றுலா நிறுவனம் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் தான் வீனஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜித் குமார் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அதாவது பயணத்தின் மூலமாக ஒருவரை நல்ல மனிதராக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

ரசிகர்களுக்கு நடிகர் அஜித்தின் அட்வைஸ்!! | AK பேசியது என்ன? - Watch Asianet News Tamil Video

Ajith Kumar

அந்த வீடியோவில் அஜித் என்ன பேசியிருக்கிறார் என்றால், பயணத்தை விட சிறந்த கல்வி இருக்க முடியாது. இதுவரையில் நீங்கள் சந்திக்க மனிதர்களை கூட இந்த சாதியும், மதமும் வெறுக்க வைக்கிறது. அது உண்மை தான். மக்களை பார்க்காமலேயே அவர்கள் இப்படித்தான் என்று மதிப்பிடக் கூடும். ஆனால், பயணம் செய்யும் போது புதுவிதமான அனுபவத்தின் வாயிலாக பலவற்றை அனுபவிக்கிறோம்.

அதன் மூலமாக பல நாட்டைச் சேர்ந்தவர்கள், மதங்களைச் சேர்ந்தவர்களை சந்திக்கிறோம். அவர்களது கலாச்சார முறை குறித்தும் அறிந்து கொள்கிறோம். மேலும், அவர்களை புரிந்து கொள்ள முடியும். இது உங்களை நல்ல மனிதராக மாற்ற உதவும் என்று கூறியுள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் அஜித்தின் அட்வைஸ்!! | AK பேசியது என்ன? - Watch Asianet News Tamil Video

Latest Videos

click me!