
தமிழ் சினிமாவில், சுமார் 15,000-திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பிரபலமானவர் கவிஞர் வாலி. பாடலாசிரியர் என்பதை தாண்டி, எழுத்தாளராக 10-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார். குறிப்பாக இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் மிகவும் புகழ் பெற்றவை. அதே போல் ஆனந்த விகடன் இதழில் வாலி, தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.
தமிழ் சினிமாவில், சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார் வாலி. தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு, ஓவியத்திலும் ஆர்வம் அதிகமாக இருந்தது. இவர் நன்றாகப் படம் வரையும் திறமை கொன்றவர். அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே, தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்ததாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். அப்போது தான் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ரங்கராஜன் என்கிற அவரின் பெயரை, நீ ‘மாலி'யைப் போல சிறந்த ஓவியனாக வேண்டும் என கூறி 'வாலி' என மற்ற... கால போக்கில் வாலிக்கு இந்த பெயரே நிலைத்து விட்டது.
தமிழ் மீது இவர் வைத்திருந்த பற்று... பத்திரிக்கை ரூபத்தில் கைகொடுக்கவில்லை என்றாலும், வாலியை ஒரு பாடலரிசியராக மாற வைத்தது. எம்.எஸ்.வி-க்கு வாலி எழுதிய பாடல் பிடித்ததால்.. ஒரே ஒரு பாடல் மட்டுமே தயாரிப்பாளரிடம் கூறி வாங்கி தருவதாக சொல்லி, பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்று தந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி என ஏராளமான நடிகர்களுக்கு வாலி எழுதிய பாடல்கள் மிகவும் பிடித்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு வார்த்தைகளை கையாளுவதில் கை தேர்தவர் வாலி.
தன்னுடைய 70 வயதில் கூட... இளவட்ட ரசிகர்களுக்கு ஏற்றாப்போல் பாடல் எழுதுவதில் கில்லியாகி இருந்தார். இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர் வாலி பாட்டுக்காக காத்திருந்த நாட்கள் உண்டு. இந்நிலையில் வாலி மும்பையில் ஒரு இக்கட்டான சூழலில் இருந்த போது தனக்கு டாட்டா உதவியது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
சினிமாவுக்கு கும்பிடு போடுகிறாரா ரஜினிகாந்த்? எச்சரித்தது யார்... கடைசி படம் இதுவா!
இந்த பேட்டியில் வாலி கூறியுள்ளதாவது... "மனித தன்மை எவ்வளவு பெரிய ஆட்களுக்கு இருக்கிறது என்பதற்காக இதை சொல்கிறேன். ஒரு நாள் பயங்கர இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. நான் Chowpatty Beach ஓரமாக ரோட்டில் நடந்து வந்துகொண்டிருந்தேன். அப்போது நேரம் சரியாக 9:30 இருக்கும். என் பக்கத்தில் ஒரு சிறிய கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்த நபர், கண்ணாடியை கீழே இறக்கி, 'யங் பாய் நீங்கள் எங்கே போக வேண்டும் என ஆங்கிலத்தில் கேட்டார்'. நான் விடி ஸ்டேஷன் போக வேண்டும் என கூறினேன். உடனே அவர் தன்னுடன் வரும் படி கூறினார். நான் உள்ளே வந்தால் காரில் உள்ள இடம் முழுவதும் நனைந்து விடும் என்றேன். உடனே அவர் பரவாயில்லை வாருங்கள் என, என்னை விடி ஸ்டேஷனில் செல்ஃப் டிரைவ் செய்து கொண்டு வந்து இறக்கி விட்டார்.
நான் அவருக்கு நன்றி சொல்லி விட்டு, உங்கள் பெயர் என்ன என்று கேட்டதற்கு, அவர் என்னை மக்கள் JRD டாட்டா என்ன அழைப்பார்கள் என சொல்லிவிட்டு சென்றார். ஒரு இக்கட்டான நிலையில் நான் இருக்கும் போது அவ்வளவு பெரிய பணக்காரரிடம் இருந்த மனித தன்மை தான் அன்று எனக்கு தெரிந்தது. மும்பையில் தனக்கு நேர்ந்த மறக்க முடியாத அனுபவம் இது என கவிஞர் வாலி கூறியுள்ளார்.
14 வருட காத்திருப்பு; 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணையும் முக்கிய பிரபலம்!