"இருவர்" படம் பார்த்துவிட்டு வந்த உதயநிதி.. கோபித்துக்கொண்ட தாத்தா கருணாநிதி - ஏன் தெரியுமா?
Udhayanidhi Stalin : தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தா கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
Udhayanidhi Stalin : தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது தாத்தா கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட சுவாரசியமான சம்பவம் குறித்து பேசியுள்ளார்.
இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகித்து வந்தாலும், கடந்த 2008ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை திரைத்துறையில் பயணித்து வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குருவி" என்ற திரைப்படத்தின் மூலம் தான் தயாரிப்பாளராக தனது கலை உலக பயணத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கினார். அவருடைய திரை வாழ்க்கையில் மொத்தம் ஏழு திரைப்படங்களை அவர் தயாரித்து வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் கடந்த 2009ம் ஆண்டு தன்னுடைய தயாரிப்பில் வெளியான "ஆதவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து நடிகராகவும் பயணிக்க தொடங்கினார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி! வெளியானது புதிய ப்ரோமோ!
"ஆதவன்" திரைப்படத்திற்கு பிறகு சுமார் 3 ஆண்டு காலம் திரைத்துறையில் பயணிக்காமல் இருந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2012ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அந்த திரைப்படம் இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. அது மட்டுமல்ல மூன்று முக்கிய விருதுகளையும் அறிமுக நடிகருக்காக அவருக்கு கிடைக்கச்செய்தது. அதை தொடர்ந்து "இது கதிர்வேலன் கதை", "நண்பேண்டா", "உயர்ந்த மனிதன்", மற்றும் "சரவணன் இருக்க பயமேன்" உள்ளிட்ட திரைப்படங்களிலும் நாயகனாக உதயநிதி நடித்தார். அந்த அனைத்து திரைப்படங்களுக்கும் தயாரிப்பாளராகவும் செயல்பட்டது உதயநிதி தான்.
இறுதியாக தமிழில் கடந்த 2023ம் ஆண்டு பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான "மாமன்னன்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போதே அவர் அமைச்சராக வலம்வந்ததும் குறிப்பிடத்தக்கது. "மாமன்னன்" படத்திற்கு பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று, முழு நேர அரசியலில் அவர் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். இந்த சூழலில் நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை திராவிட முன்னேற்ற கழகம், உதயநிதி ஸ்டாலினை தமிழகத்தின் புதிய துணை முதலமைச்சராக பணியமர்த்தியது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பிரபல நடிகர் ஒருவரின் YouTube சேனலுக்கு பேட்டி அளித்த அவர், தனது தாத்தா கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட ஒரு சிறு சண்டை குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் "இருவர்". அதே ஆண்டு கலைஞரின் படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஒருநாள் இருவர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய உதயநிதியிடம் என்ன படத்திற்கு சென்று வந்தாய் என்று கேட்டுள்ளார் கருணாநிதி.
அதற்கு "இருவர்" என்று உதயநிதி சொல்ல, ஏன் என் படம் வெளியாகியுள்ளது அதை பார்க்கவில்லையா என்று கேட்க, அதை ஏற்கனவே பார்த்துவிட்டேன் என்று கூறியுள்ளார் உதயநிதி. அதற்கு கருணாநிதி, ஏன் இன்னொரு தரம் பார்க்கமாட்டாயா என்று கேட்டு கோபித்துக்கொண்டாராம்.