Bigg Boss Tamil Season 8: பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தான்! வெளியானது புதிய லிஸ்ட்!

First Published | Oct 5, 2024, 3:35 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்கள் பற்றிய புதிய லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.
 

Bigg Boss new Contestant list

பிக்பாஸ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் டிவியில் நாளை முதல் ஒளிபரப்பாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி. ஹிந்தியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற தென்னிந்திய மொழிகளில் கடந்த சில வருடங்களுக்கு முன் துவங்கப்பட்டது. குறிப்பாக தமிழில், கடந்த 2017 ஆம் ஆண்டு, துவங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

முதல் சீசனில் இருந்து தொடர்ந்து 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த ஆண்டு தன்னுடைய திரைப்பட பணிகள் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். எனவே சீசன் 8 நிகழ்ச்சியை,  இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார்.

Bigg Boss Tamil season 8

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்து பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் பற்றிய விவரங்களும் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில் நாளை முதல் ஆரம்பமாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் சூட்டிங், இன்றே துவங்கி உள்ள நிலையில், இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளதாகவும்,  அவர்கள் யார் யார்? என்கிற புதிய போட்டியாளர் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சினிமாவுக்கு கும்பிடு போடுகிறாரா ரஜினிகாந்த்? எச்சரித்தது யார்... கடைசி படம் இதுவா!
 

Tap to resize

18 Contestant in Bigg boss Season 8

இந்த 18 பிரபலங்களின் பெயர்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது . அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி, பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில், பிரபல சர்ச்சை  தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகர் கலந்து கொள்ள உள்ளாராம், இவரை தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான ரஞ்சித், செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ்,  பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருண் பிரசாத், பிரபல தொகுப்பாளரும்.. விஜய் டிவியில் அண்மையில் முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியலில் நடித்து வந்த நடிகர் தீபக், கானா பாடகர் பால் டப்பா, டான்சர் கோகுல்நாத்,  பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே விஷால், நடிகர் சந்தோஷ் பிரதாப், விஜய் டிவி தொகுப்பாளர் ஜாக்குலின், சீரியல் நடிகை பவித்ரா ஜனனி, மகாராஜா பட நடிகை சஞ்சனா நமீதாஸ், டான்ஸம் குக் வித் கோமாளி பிரபலமான சுனிதா, செல்லமா சீரியல் நடிகை அன்ஷிகா, சீரியல் நடிகை தர்ஷா குப்தா, டிடிஎஃப் வாசனின் காதலி ஷாலின் சோயா, வேற மாறி ஆபீஸ் வெப் சீரிஸில் நடித்து பிரபலமான சௌந்தர்யா நஞ்சுட்டன், நடிகை ஐஸ்வர்யா பாஸ்கர், ஆகியோர் இந்த புதிய லிஸ்டில் இடம் பிடித்துள்ளனர்.
 

Bigg Boss love Couples

பெரும்பாலும் இந்த சீசனில், சீரியல் பிரபலங்களே அதிகம் கலந்து கொண்டுள்ளனர். இளம் வயது பிரபலங்கள் பலர் உள்ளதால், கண்டிப்பாக இந்த முறை பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் கண்டென்ட்டுக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது. அதே போல் 'செல்லம்மா' சீரியல் நடிகை அன்ஷிகா மற்றும் அர்னவ் ஆகியோர் ஏற்கனவே காதலித்து வருவதாக, அர்னவ் மனைவி திவ்யா ஸ்ரீதர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்த நிலையில், இது உண்மையா என்பது பிக்பாஸ் வீட்டிற்குள் இவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை வைத்தே மக்களை முடிவு செய்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil Season 8: கமலுக்கு 130 கோடி; சம்பள விஷயத்தில் விஜய் சேதுபதிக்கு செய்யப்பட்ட ஓரவஞ்சனை!

Latest Videos

click me!