Jayam Ravi Brothers Movie
ஜெயம் ரவி நடிக்கும் 34ஆவது படத்தின் முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் தொடர்ந்து அடுத்தடுத்து பல சர்ச்சைகளை ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் முன் வைத்து வருகின்றனர். இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அடுத்தடுத்து ஜெயம் ரவி தன்னை பிஸியாக வைத்துக் கொண்டு வருகிறார். சைரென் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெனி (Genie) மற்றும் காதலிக்க நேரமில்லை ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் அடுத்த படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அது தான் ஜேஆர்34 எனப்படும் எனப்படும் ஜெயம் ரவியின் 34ஆவது படம். இந்தப் படத்தை டாடா படத்தை இயக்கி ஹிட் கொடுத்த இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்குகிறார். ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் சார்பில் சுந்தர் ஆறுமுகம் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.
Jayam Ravi Divorce
இதற்கு முன்னதாக இந்த நிறுவனம் ஜெயம் ரவியின் அகிலம் மற்றும் பிரதர் படங்களை தயாரித்துள்ளது. பிரதர் படத்திற்கு இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் மீண்டும் ஜெயம் ரவியுடன் கை கோர்த்துள்ளார். அவரது 34ஆவது படத்திற்கும் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இருட்டு, தாராள பிரபு, எம்ஜிஆர் மகன், இடியட், சாணி காயிதம், அகிலன் ஆகிய படங்களை தயாரித்த ஸ்கிரீன் சீன் மீடியா பிரதர் படத்தையும் தயாரித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள பிரதர் படத்தை இயக்குநர் எம் ராஜேஷ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சீதா, ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள மக்காமிஷி பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் டிரெண்டானது.
JR34, Jayam Ravi 34th Movie
பிரதர் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 31 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தான் அகிலன் மற்றும் பிரதர் படங்களுக்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவியின் 34 ஆவது படத்தையும் ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனமே தயாரிக்கிறது. இது குறித்த அறிவிப்பி போஸ்டர் மூலமாக வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை வைத்து பார்க்கும் போது ஜெயம் ரவி 2 வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.