
விஜய் டிவியில் கடந்த 7 வருடங்களாக, ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு செம்ம டஃப் கொடுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, நாளை துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் முதல், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பற்றிய தகவல் அடுத்தடுத்து வெளியாகி வருவதை தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் மட்டும் புதியவர்கள் அல்ல. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள தொகுப்பாளரும் புதியவர் என்பதால்... கமல்ஹாசனுக்கு நிகராக விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை நேர்த்தியாக கொண்டு செல்வாரா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிக்பாஸ் ப்ரோமோவில் கூட, விஜய் சேதுபதிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை எப்படி நிகழ்ச்சியை கொண்டு செல்ல வேண்டும் என்று அட்வைஸ் கொடுப்பது போல் தான் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் விஜய் சேதுபதி, நடிகர் கமல்ஹாசனுடன் விக்ரம் படத்தில் இணைந்து நடித்துள்ளதால், கடந்த சில வருடங்களாகவே கமல் விஜய் சேதுபதிக்கு இடையே நடிகர்கள் என்பதை தாண்டி நல்ல நட்பும் உள்ளது. எனவே கமல் பிக்பாஸ் குறித்து விஜய் சேதுபதிக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். அதே போல் கமல்ஹாசன் அரசியல் கட்சி துவங்கிய பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் உள்ளே வலுக்கட்டாயமாக சில அரசியல் கருத்துக்கள் திணிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த முறை விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதால், அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியாகவே இது இருக்க கூடும்.
14 வருட காத்திருப்பு; 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணையும் முக்கிய பிரபலம்!
அதே நேரம், கமல் தலை சிறந்த நூல்கள், நாவல்கள் குறித்து பேசுவது போல் விஜய் சேதுபதி புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாகவோ, அல்லது சமூக கருத்தையோ பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் கொண்டு வருவாரா? என்பது சந்தேகமே. பிக்பாஸ் துவங்க இன்னும் 24 மணிநேரம் உள்ள நிலையில், விஜய் சேதுபதிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கொடுக்கப்பட உள்ள சம்பளம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு பிக்பாஸ் முதல் சீசனை தொகுத்து வழங்குவதற்கே, சுமார் 50 கோடி கொடுக்கப்பட்டது. அடுத்தடுத்த சீசங்களில் சம்பளத்தை உயர்த்தி கொண்டே சென்ற கமல், இறுதியாக நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க... 130 கோடி வாங்கினார். ஆனால் விஜய் சேதுபதிக்கு சம்பள விஷயத்தில் காட்டப்பட்ட ஓரவஞ்சனையை குறிப்பிட்டு ரசிகர்கள் சிலர் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
காரணம், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க... விஜய் சேதுபதிக்கு கமல்ஹாசனுக்கு முதல் சீசனில் வழங்கப்பட்ட சம்பளத்தில், பாதி கூட வழங்கவில்லை. இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், ரூபாய் 15 கோடி மட்டும் தான் வழங்க பட உள்ளதாம். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், விஜய் சேதுபதி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே தோன்றுவார். சனி - ஞாயிறு எடுக்கப்படும் எபிசோடுகள் ஒரே நாளில் ஷூட் செய்து முடிக்கப்படும். அப்படி பார்த்தால், கமலாக இருந்தாலும் விஜய் சேதுபதியாக இருந்தாலும், ஒரே ஒரு நாள் மட்டுமே பிக்பாஸ் படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள்.
Video: முன்னாள் காதலன் ராபர்ட்டுக்கு மிஸ்ஸசாக மாறும் வனிதா விஜயகுமார்! அட காரணம் ஜோவிகா தானா?
இப்படி பார்த்தால், தொகுப்பாளர்கள் 100 நாட்களில், 15 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும், கமல்ஹாசன் இந்த 15 நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தான், 130 கோடி வரை சம்பளம் பெற்றார். ஆனால் விஜய் சேதுபதிக்கு ஒரு நாளைக்கு, 1 கோடி வீதம்... 15 நாட்களுக்கு 15 கோடி மட்டுமே சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம். ஆனால் கமல் வாங்கிய சம்பளத்தில் கால் வாசி கூட விஜய் சேதுபதிக்கு கொடுக்காமல் இப்படி ஓரவஞ்சனை செய்வது நியாயமா? என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள முக்கிய காரணம், இந்த நிகழ்ச்சியின் பரிசு தொகையை தவிர சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதே. ஆரவ், ரித்திகா, முகேன் ராவ், ஆரி, போன்ற பிரபலங்கள் டைட்டில் வென்று கூட... சினிமாவில் நிலையான இடத்தை பிடிக்காத நிலையில், டைட்டில் பட்டத்தை கைப்பற்றாமலே, ஹரீஷ் கல்யாண், கவின், ரியோ, போன்ற பிரபலங்கள் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.