அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் காம்போவில் உருவாகும் 'குட் பேட் அக்லி' படத்தில், அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ள முக்கிய பிரபலம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக பார்க்கப்படும் அஜித் நடிப்பில், 'துணிவு' படத்தை தொடர்ந்து இதுவரை ஒரு படம் கூட வெளியாகாமல் உள்ளது. தீபாவளிக்கு வெளியாவதாக கூறப்பட்ட, 'விடாமுயற்சி' திரைப்படமும் இதுவரை ஷூட்டிங் முடியாத காரணத்தால், விடாமுயற்சி ரிலீஸ் பொங்கலுக்கு தள்ளி போய் உள்ளது. அதே போல், 'குட் பேட் அக்லி' திரைப்படம் அஜித்தின் பிறந்தநாளுக்கு ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
24
Ajith kumar
அஜித்தின் படப்பிடிப்பு பணிகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வந்தாலும், மற்றொருபுறம்... அஜித் தன்னுடைய கார் ரேஸுக்காக தயாராகி வருகிறார். அண்மையில் அஜித் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. மேலும் அவ்வப்போது அஜித்தின், குட் பேட் அக்லி படம் குறித்தும், அதில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தகவலும் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், நடிகர் பிரசன்னா அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கும் தகவலை உறுதி செய்தார். முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிப்பதை மிகவும் பூரிப்புடன் பகிர்ந்து கொண்ட பிரசன்னா, அஜித்துடன் நடித்த அனுபவங்களையும் பகிர்ந்தார். அதே போல் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் தயாரிப்பாளருக்கும் நன்றி கூறி இருந்தார்.
44
Prabu join Good Bad Ugly
பிரசன்னாவை தொடர்ந்து, 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர் ஒருவர் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவர் வேறு யாரும் அல்ல, நடிகர் பிரபு தான். இவர் ஏற்கனவே, அஜித் நடித்த ’பில்லா’, 'அசல்' ஆகிய படங்களில் நடித்திருந்த நிலையில், சுமார் 14 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்க உள்ளார். அதே போல் முதல் முறையாக தன்னுடைய மருமகன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு நடிக்க உள்ளார். அடுத்தடுத்து, இந்த படத்தில் இணையும் முன்னணி பிரபலங்களால் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.