Thalapathy 69:கேரளாவில் முதல்கட்ட படப்பிடிப்பு – விஜய், பூஜா ஹெக்டேயின் குத்து பாடலை படமாக்கும் தளபதி 69 டீம்?

First Published | Oct 5, 2024, 8:54 AM IST

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் இன்று தொடங்குகிறது. அரசியல் பின்னணியை மையப்படுத்திய இந்த படம் விஜய்யின் அரசியல் வருகைக்கு முன்னோடியாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Thalapathy 69 Story and Title

கோட் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படம் தளபதி 69. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தை அஜித்தின் மாஸான இயக்குநரான ஹெச் வினோத் இயக்குகிறார். மேலும், அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக வினோத் மற்றும் அனிருத் இந்தப் படத்தின் மூலமாக ஒன்றாக இணைந்துள்ளனர்.

கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தளபதி 69 படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரைன், மோனிஷா பிளெஸ்ஸி ஆகியோர் பலர் நடிக்கின்றனர். 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு தளபதி 69 போஸ்டர் மூலமாக அறிவித்திருக்கிறது.

Thalapathy 69 Poojai

தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்திற்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் தளபதி 69 படத்திற்கு ரூ.275 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இந்தப் படத்தின் பூஜையானது நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பூஜை விழாவில் விஜய் வெள்ளை நிற வேஷ்டி, சட்டையில் அழகிய தமிழ் மகன் போன்று வருகை தந்திருந்தார். மேலும், கழுத்தில் மாலையுடனும், நெற்றியில் சந்தனம், குங்குமத்துடனும் போஸ் கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.

Tap to resize

Actor Vijay

எப்போது பூஜை போடப்பட்டு ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டதோ, அப்போதே படம் குறித்து ஒவ்வொரு தகவலும் சமூக வலைதளங்களில் கசியத் தொடங்கியது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படமானது முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்தியே உருவாக்கப்பட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு முன்னதாக தளபதி 69 படம் வெளியாகும் என்பதால், இந்தப் படத்தின் கதை, காட்சிகள், வசனங்கள் எல்லா அரசியலை பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தப் படத்தில் விஜய்யின் கட்சி கொடியும் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முன்னதாக தலைவா மற்றும் சர்கார் படங்களில் விஜய் அரசியல் கதைகளில் நடித்திருந்தார். இதில் சர்கார் படம் சற்றும் வேறுபட்டது. சுந்தர் ராமசாமி என்ற கதாபாத்தில் சிஇஓவாக நடித்து அதன் பிறகு தனது வேலையை ராஜினாமா செய்து அரசியல்வாதியாக களம் கண்டு வெற்றியும் பெற்றார்.

Thalapathy 69 Cast

அரசியல் பிரச்சாரமும் மேற்கொண்டார். தனது ஒரு வாக்கிற்காக நீதிமன்றத்தையும் நாடினார். இப்படியெல்லாம் ஒரு அரசியல் கதையில் நடித்திருந்தார். தற்போது அதே போன்று ஒரு கதையிலும் தான் விஜய் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹெச் வினோத் படம் என்பதால், அவருடைய ஆக்‌ஷன் காட்சிகளும் இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும்.

இதற்கு முன்னதாக சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு படங்களை கொடுத்திருந்தார். இந்தப் படங்கள் எல்லாம் முழுக்க முழுக்க த்ரில்லர் மற்றும் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்தியிருந்தது. இதே போன்று அரசியல் ஆக்‌ஷன் த்ரில்லர் கதையில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. நேற்று சென்னையில் பூஜை நடந்ததைத் தொடர்ந்து இன்று முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது.

Thalapathy 69 Movie Schedule

அதிகப்படியான ரசிகர்களை கொண்ட கேரளாவின் பையனூர் பகுதியில் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இன்று தொடங்கும் முதல்கட்ட படப்பிடிப்பில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தொடர்பான பாடல் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. அதோடு இந்தப் பாடலுக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துக் கொடுக்கிறார். இதற்காக பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் இந்தப் படத்திற்கு அரசியல் தொடர்பான ஒரு டைட்டில் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது, தலைவா, சர்கார் படங்களைப் போன்று இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஜனநாயகம் என்று கூட டைட்டில் இருக்கும் என்று தகவல் பரவி வருகிறது. ஏனென்றால், விஜய்யின் தளபதி 69 பட போஸ்டரில் ஜனநாயகத்தை காக்க கையில் தீப்பந்தம் ஏந்தி இருப்பது போன்று ஒரு புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. ஆதலால், இது அரசியல் படம் தான் என்று சொல்லப்படுகிறது.

Thalapathy 69 First Schedule, Payyanur

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதோடு, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான அரசியல் பயணமாக தளபதி 69 படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

கத்தி, மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ படங்களைத் தொடர்ந்து 5ஆவது படமான தளபதி 69 படத்தில் விஜய் மற்றும் அனிருத் இருவரும் இணைந்துள்ளனர். பூஜா மற்றும் விஜய் இருவரும் பீஸ்ட் படத்திற்கு பிறகு 2ஆவதாக தளபதி 69 படத்தில் இணைந்துள்ளனர்.

Actor Vijay's Thalapathy 69 Cast

பிரேமலு படம் மூலமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற மமிதா, ரெபெல் என்ற தமிழ் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷாலின் 21ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது தளபதி 69 படத்திலும் இணைந்துள்ளார்.

Latest Videos

click me!