"40 நாளுக்கு முன்பே சொன்ன ரஜினி.. அவரைவிட எனக்கு படம் முக்கியமில்ல" - வருத்தப்பட்ட லோகேஷ்!

Ansgar R |  
Published : Oct 04, 2024, 11:15 PM IST

Lokesh Kanagaraj : கூலி பட முதல் கட்ட பணிகளை முடித்துவிட்டு சென்னை திரும்பிய லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

PREV
14
"40 நாளுக்கு முன்பே சொன்ன ரஜினி.. அவரைவிட எனக்கு படம் முக்கியமில்ல" - வருத்தப்பட்ட லோகேஷ்!
rajinikanth coolie

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 171வது திரைப்படமாக "கூலி" என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே ஜெயிலர் மற்றும் மேட்டையன் ஆகிய திரைப்பட பணிகளை சிறப்பாக முடித்த அவர் சில, கால ஓய்வுக்கு பிறகு தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் தான் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்வாங்கிய கங்குவா.. ஆனா வேட்டையனோடு ரேஸில் இறங்கும் டாப் தமிழ் நடிகர் - வெளியான புது அப்டேட்!

24
coolie shooting

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அல்லாத ஒரு சிறிய சிகிச்சை ஒன்று அளிக்கப்பட்டது. அவருடைய இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஒரு சிறு வீக்கம் இருந்த நிலையில், அது இப்போது சரி செய்யப்பட்டு இரண்டு நாள் மருத்துவ கண்காணிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது வீடு திரும்பி இருக்கிறார். சுமார் பத்து நாள் ஓய்வுக்கு பிறகு அவர் மீண்டும் கூலி திரைப்பட பணிகளில் இணைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

34
coolie movie

இந்த சூழலில் கூலி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை விசாகப்பட்டினத்தில் முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், செய்தியாளர்களை சந்தித்து பல உண்மைகளை மனம் வருந்தி பேசியிருக்கிறார். முதலில் நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகை குறித்து கேள்வி கேட்டதற்கு "எனக்கும் அவர் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் அவர் ஒரு பாதையை தேர்ந்தெடுக்கிறார். அது முற்றிலும் அவருடைய விருப்பம்" என்று தெரிவித்திருக்கிறார்.

44
lokesh kanagaraj

தொடர்ச்சியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் "நாங்கள் விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கில் இருக்கும் பொழுது சென்னையில் வெளியான செய்திகள் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம் நாங்கள் "கூலி" திரைப்பட பணிகளை துவங்கிய வெகு சில நாட்களிலேயே, தனக்கு அறுவை சிகிச்சை அல்லாத ஒரு சிறிய சிகிச்சை நடக்க உள்ளதை முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்களிடம் கூறிவிட்டார். சுமார் 40 நாட்களுக்கு முன்பே செப்டம்பர் 28ம் தேதி வரை அவருடைய காட்சிகள் எடுக்கப்படும்".  

"அக்டோபர் 29ஆம் தேதி அவர் சென்னை வந்து, 30 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடித்து அக்டோபர் 15 மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைவார் என்று எல்லாமே முன்பே பேசி அதற்கு தகுந்தாற்போல ஷூட்டிங்கை எடுத்தோம். ஆனால் இங்கு ஊடகங்களில் வேறு விதமாக பேசப்பட்டது எங்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. ரஜினிகாந்த போன்ற ஒரு நடிகரை விட எனக்கு படம் முக்கியமில்லை. அவர் எங்களிடம் எல்லா விஷயத்தையும் கூறிவிட்டு தான் வந்தார்" என்று தெளிவாக கூறியுள்ளார்.

TRP-யில் பொளந்து கட்டும் சன் டிவியின் புது சீரியல்கள்! சிறகொடிந்த சிறகடிக்க ஆசை! டாப் 10 பட்டியல்!

Read more Photos on
click me!

Recommended Stories