பின்வாங்கிய கங்குவா.. ஆனா வேட்டையனோடு ரேஸில் இறங்கும் டாப் தமிழ் நடிகர் - வெளியான புது அப்டேட்!

Ansgar R |  
Published : Oct 04, 2024, 10:25 PM IST

Vettaiyan Vs Black : வருகின்ற ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விடுமுறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படம் வெளியாகும் அந்த வாரத்தில், மற்றொரு தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளது.

PREV
14
பின்வாங்கிய கங்குவா.. ஆனா வேட்டையனோடு ரேஸில் இறங்கும் டாப் தமிழ் நடிகர் - வெளியான புது அப்டேட்!
Suriya and Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் தான் "வேட்டையன்". கடந்த 2023 மற்றும் இந்த 2024ம் ஆண்டில் மட்டும் ஏற்கனவே இரண்டு திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு தற்பொழுது தனது மூன்றாவது திரைப்பட பணிகளில் பிஸியாக பயணித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக பிரபல இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

TRP-யில் பொளந்து கட்டும் சன் டிவியின் புது சீரியல்கள்! சிறகொடிந்த சிறகடிக்க ஆசை! டாப் 10 பட்டியல்!

24
Amitabh Bachchan

வேட்டையன் திரைப்பட பணிகளை ஏற்கனவே முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கடந்த சில வாரங்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் "கூலி" திரைப்படத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ள அவர், வெகு சில நாட்களில் மீண்டும் தனது கூலி திரைப்பட பணிகளை துவங்க உள்ளார். முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஸ்டைலில் ஒரு கிளாசிக் ரஜினிகாந்தை அவருடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பு தகவலை வெளியிட்ட வருகின்றன.

34
Vettaiyan Release

இந்த சூழலில் ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படமும், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருந்தது. ஆனால் மூத்த நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து மோதுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது என்று நடிகர் சூர்யா பொதுவெளியில் அறிவித்திருந்தார். அதாவது நாம் சிறுவர்களாக இருந்தபோதே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் அவர். 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட அவருடைய திரைப்படத்தோடு நமது திரைப்படம் மோதுவது முறையாக இருக்காது என்று கூறி வேட்டையன் படம் வெளியாகும் அதே நாளில் கங்குவா வெளியாகாது என்று கூறியிருந்தார்.

44
Black Movie

ஆனால் இந்த சூழலில் மற்றொரு திரைப்படம் வேட்டையன் படத்திற்கு போட்டியாக களமிறங்கவுள்ளது. நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள "பிளாக்" திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 11-ம் தேதி வேட்டையன் திரைப்படம் வெளியான அடுத்த நாளே திரையரங்குகளில் வெளியாக உள்ளது மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.

"வேட்டையன் சும்மா பட்டாசா இருக்கு" தனது ஸ்டைலில் Review சொன்ன அனிரூத் ரவிச்சந்திரன்!

Read more Photos on
click me!

Recommended Stories