சிரஞ்சீவி வீட்டுக்கு ஆர்டர் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்; எதுக்கு தெரியுமா?

First Published | Oct 5, 2024, 6:34 PM IST

'போலா சங்கர்' படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். படப்பின்போது திடீரென சிரஞ்சீவி வீட்டுக்கு ஒரு ஆர்டர் போட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். அது என்னவென்று பார்க்கலாம்.
 

சிரஞ்சீவி வீட்டுக்கு ஆர்டர் போட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!!

தெலுங்கு திரையுலகில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. அவருக்கு தெலுங்கு திரையுலகில் பெரிய மரியாதை இருக்கிறது. அரசியல் குடும்பத்தையும் சேர்ந்தவராக இருக்கிறார். இவரது கருத்துக்கு தெலுங்கானா, ஆந்திராவில் செல்வாக்கு உண்டு. அவரை யாராவது மிரட்டுவார்களா? என்றால் நோ தான் சொல்ல வேண்டும். அப்படி இருக்கையில் அவரை மிரட்டும் துணிச்சல் யாருக்கு வரும். ஆனால் ஒரு நடிகை அந்த துணிச்சலை காட்டியுள்ளார்.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் முடிசூடா மன்னனாக வலம் வருகிறார் சிரஞ்சீவி. சாதாரண நடிகராக ஆரம்பித்து. முன்னணி நடிகராக, பின்னர் மெகாஸ்டாராக சிரஞ்சீவியின் பயணம் தொடர்கிறது. தற்போது தெலுங்கு திரையுலகில் பெரிய ஆளுமையாக, மாறியுள்ளார் சிரஞ்சீவி. தெலுங்கு சினிமாவுக்கு ஏதாவது பிரச்சனை என்றால்.. நான் இருக்கிறேன் என்று முன் நிற்பார் சிரஞ்சீவி. 

நடிகராக திரைப்படங்களில் நடித்து வருவதுடன், திரையுலக நலன்களையும் கவனித்து வருகிறார். மேலும் மெகா ஸ்டாராக உருவெடுத்து இருக்கும் ராம் சரணின் தந்தையாகவும் இருக்கிறார். சிரஞ்சீவியின் புகழ் தெலுங்கு திரையுலகில் மட்டுமே கொடி கட்டிப் பறந்தது. 

ஆனால் ராம் சரணின் புகழ் இந்தியா முழுவதும் பரவி உள்ளது. ஆஸ்கார் வரை சென்றது. எந்த பின்புலமும் இல்லாமல் திரையுலகில் அடி எடுத்து வைத்து, இன்று மெகா ஸ்டாராக திகழ்கிறார் சிரஞ்சீவி.

Tap to resize

நடிகர் குடும்பம்

அவரது குடும்பத்தில் ஆறு நடிகர்கள் இருக்க, அதில் நான்கு பேர் இந்திய அளவில் பிரபலமான நடிகர்கள். அந்த வகையில் இந்திய திரையுலகில் கபூர் குடும்பத்திற்கு அடுத்தபடியாக சிரஞ்சீவி குடும்பம் இருக்கிறது. மேலும் திரைப்பட தயாரிப்பு, வர்த்தகம் என சிரஞ்சீவி குடும்பத்தின் எல்லை விரிந்துள்ளது. இப்படி பெரிய அளவில் வளர்ந்த மெகாஸ்டாரை மிரட்ட யாருக்கு துணிச்சல் வரும்? ஆனால் ஒரு நடிகை இதை செய்துள்ளார். 
 

கீர்த்தி சுரேஷ்

இதை சிரஞ்சீவியே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த நடிகை வேறு யாரும் இல்லை நம்ம இளம் மகாநடி கீர்த்தி சுரேஷ் தான். ஆமாம் சிரஞ்சீவியை மிரட்டி அவரது வீட்டில் இருந்து கீர்த்தி சுரேஷ் சாப்பாடு வரவழைத்தாராம். 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிரஞ்சீவிக்கு நெருக்கமானாராம் கீர்த்தி. 
 

தமன்னா

நடிகையாக இருந்த தமன்னா என்னிடம் எந்த ஒரு கோரிக்கையும் வைக்கவில்லை ஆனால்.. கீர்த்தி சுரேஷ் மட்டும் என்னை நன்றாக மிரட்டுவார் என்று கூறினார் சிரஞ்சீவி. எனக்கு தயாரிப்பு குழு தரும் சாப்பாடு பிடிக்கவில்லை. வெளியில் சாப்பிட மாட்டேன் என்று என்னிடம் கீர்த்தி சுரேஷ் கூறினார்.  

சரி சாப்பிடாமல் இருக்க முடியாதே என்று  என் வீட்டிலிருந்து சாப்பாடு வரவழைப்பேன்.. அப்போது அந்த சாப்பாட்டை தினமும் சாப்பிட்டுவிட்டு, இது சரியில்லை, அதில் அதை மாற்ற சொல்லுங்கள் என்று கோரிக்கை வைப்பாராம். இது என்ன ஹோட்டலா. என்று நான் சிரித்துக்கொண்டே சொல்வேன் என்று சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். 

போலா சங்கர்' புரமோஷன்

'போலா சங்கர்' புரமோஷனுக்காக நடந்த ஒரு நேர்காணலில் இதை சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது. 

Latest Videos

click me!