Vijay and H Vinoth: ரூ.1000 கோடியை டார்க்கெட் செய்த விஜய் – வரலாற்று சாதனை படைக்குமா Thalapathy 69 படம்?

First Published | Oct 5, 2024, 8:35 PM IST

கடைசி படத்தின் மூலம் சாதனைகளை முறியடிக்க தளபதி விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அரசியலில் களமிறங்கிய அவர், தனது கடைசி படமான தளபதி 69 படத்தை பூஜையுடன் தொடங்கினார். 

Thalapathy 69

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தளபதி, அரசியலில் களமிறங்க உள்ளார். சினிமாவில் இருந்து நிரந்தரமாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தளபதி 69 அவரது கடைசி படம். விஜயின் அரசியல் பிரவேசம் மற்றும் அவரது கடைசி படம் குறித்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

Thalapathy 69 Aim 1000 Crore Collection

வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் வகையில் தளபதி 69 தமிழ் திரைப்படத்தின் மூலம் பல சாதனைகளை முறியடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது திரை வாழ்க்கையில் இதுவரை 1000 கோடி வசூல் செய்த படங்கள் எதுவும் என்று இல்லை.

தற்போது பான் இந்தியா படங்கள், குறிப்பாக தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் 1000 கோடி இலக்கை நோக்கி பாய்ந்து சென்று கொண்டிருக்க, தனது கடைசி படத்தின் மூலம் அந்த சாதனையை முறியடிக்க தளபதி விரும்புவதாக கூறப்படுகிறது. 

Tap to resize

Vijay's Thalapathy 69 Movie Shooting

இந்திய திரைப்பட வரலாற்றில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 திரைப்படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. தமிழகத்திலும் பாகுபலி வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது. ஆனால் இதுவரை முழுமையான தமிழ் திரைப்படம் இதுபோன்ற சாதனையை எட்டவில்லை என்று எண்ணும் போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

Thalapathy 69 Movie Schedule

எனவே தனது படத்தின் மூலம் இந்த மைல்கல்லை எட்டி ரசிகர்களை மகிழ்விக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளியான மிகப்பெரிய வெற்றிப் படமான லியோ, உலகம் முழுவதும் 620 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. ஆயிரம் கோடிக்கு மிக அருகில் வந்தது. எனவே தனது கடைசி படத்தை இன்னும் கவனமாக திட்டமிட்டால் இந்த சாதனையை எளிதில் முறியடிக்க முடியும் என்று அவர் நம்புவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். தளபதி 69 படத்தின் மூலம் 1000 கோடி இலக்கை எட்டி விஜய்க்கு மேலும் ஒரு மிகப்பெரிய வெற்றியை அவர் தேடித் தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இயக்குனர் ஹெச். வினோத் இந்த படத்தில் அனைத்து விதமான உணர்ச்சிகளையும் கலந்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நட்சத்திர பட்டாளத்தை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, ரசிகர்கள் மத்தியில் இதே எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Thalapathy 69 Title

நேற்று அக்டோபர் 4ஆம் தேதி தான் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இருப்பினும், இந்த விஷயம் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் பூஜாவிற்கு ஐயர்ன் லெக் என்று பெயர் உள்ளது.

ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்த பூஜா, அந்த படம் தோல்வியடைந்தது. எனவே தனது கடைசி படத்திற்காக விஜய் இதுபோன்ற பரிசோதனையை மேற்கொள்வது சரியல்ல என்று ரசிகர்கள் கருதுகின்றனர். 

Thalapathy Vijay, Thalapathy 69 Story

தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. தற்போது பையனூரில் பிரமாண்டமாக செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அந்த பாடல் காட்சியில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பாடல் காட்சிக்கு சேகர் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தளபதி 69 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி 69 படத்தில் விஜய் உடன் இணைந்து மமிதா பைஜூ, நரைன், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, மோனிஷா பிளாசி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படமானது தெலுங்கு சினிமாவி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் திரைக்கு வந்த பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் அரசியல்வாதியாக நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

Latest Videos

click me!