வீட்டுக்கு நடுவே கோடு போட்டு கொளுத்தி போட்ட பிக்பாஸ்! உள்ளே வந்த வேகத்தில் வெளியே சென்ற 6 போட்டியாளர்கள்!

First Published | Oct 6, 2024, 9:12 PM IST

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி ஆரம்பமான சில மணி நேரத்திலேயே... ஆண்கள் மற்றும் பெண்கள் என இருதரப்பு போட்டியாளர்களை முட்டி மோத வைத்துள்ளார் பிக்பாஸ்.

Bigg boss Tamil Season 8

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் போட்டியாளராக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சென்ற நிலையில், இரண்டாவது போட்டியாளராக சாச்சனா நேமிதாஸ் சென்றார். அடுத்தடுத்து சத்யா, தர்ஷா குப்தா, ஆர்ஜே ஆனந்தி, தீபக் ஆகியோர் உள்ளே சென்றனர்.

Bigg Boss Tamil season 8

6 போட்டியாளர்கள் உள்ளே வரும் வரை மூடப்பட்டிருந்த பிக்பாஸ் வீட்டின் கதவு, பின்னர் திறக்கப்பட்டது. 6 போட்டியாளர்களும் மிகவும் ஒற்றுமையாக உள்ளே நுழைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டின் நடுவே உள்ள கோட்டை குறிப்பிட்டு, ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவரும் ஏதேனும் ஒரு பக்கத்தை தேர்வு செய்ய வேண்டும் என கூறினார் பிக்பாஸ். இதை தொடர்ந்து, 3 பெண் போட்டியாளர்கள் மற்றும் 3 ஆண் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை சுற்றி பார்த்துவிட்டு, மிகவும் பெரிதாகவும், தனி தனி கட்டில்களுடன் உள்ள ரூம் தான் வேண்டும் என இருதரப்பும் முட்டி மோதிக் கொள்கிறார்கள்.

யாரை கேட்டு இங்க வந்த? சாச்சனா நேமிதாசுக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகை கொடுத்து உள்ளே அனுப்பிய விஜய் சேதுபதி!

Tap to resize

Bigg Boss Tamil season 8

இதை தொடர்ந்து, பிக்பாஸ் எந்த பக்கம் வேண்டும் என தொடர்ந்து கேள்வி கேட்டபோதும்... ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் ஒரே பக்கத்தில் இருக்கும் அறைக்காக போட்டி போட்ட நிலையில், நீங்கள் முடிவுக்கு வராததால், வெளியே சென்று, உள்ளே வந்த போது எப்படி ஒரு சோஃபாவில் அமர்ந்திருந்தீர்களே அங்கேயே போய் அமருங்கள் என கூறி விட்டார். உள்ளே வந்த வேகத்தில் போட்டியாளர்கள் வெளியே அனுப்பப்பட்டது பார்பவர்களையே அதிர்ச்சியடைய வைத்தது.

Vijay Sethupathi

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளே என்ட்ரி கொடுக்கும் நாள் அன்று, போட்டியாளர்கள் அனைவரிடமும் நல்லபடியாக பேசுவது வழக்கம். ஆனால் இந்த முறை... உள்ளே நுழைந்த சில மணிநேரங்களிலே போட்டியாளர்கள் ஒரே பக்கத்தில் உள்ள அறை வேண்டும் என்கிற பிரச்னையை மூட்டி விட்டுள்ளார். முதல் 6 போட்டியாளர்களால் முடிவு செய்யப்படமுடியாத நிலையில், சுனிதா மற்றும் ஜாப்ரி ஆகியோருக்கு பிக்பாஸ் முடிவெடுக்கும் பவாரை கொடுத்தார். ஆனால் அவர்களாலும் முடிவெடுக்க முடியாமல் போனது.

தற்போது 8 போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில்... பிக்பாஸ் நீங்கள் எந்த பக்கத்தை தேர்வு செய்கிறீர்கள் என்பதை கூறாவிட்டால் உங்களை தொடர்ந்து வரும் 2 போட்டியாளருக்கு இந்த பவர் கொடுக்கப்படும், ஒரு வேலை அவர்கள் எந்த பக்கம் என்பதை தேர்வு செய்தால் நீங்கள் 8 பேரும் வெளியே தான் இன்று தூங்க வேண்டும் என்கிற புதிய குண்டை தூக்கிப்போட ஆண்கள் ஒருவழியாக ரைட் சைடு சிறிய ரூமையும், பெண்களுக்கு லெப்ட் சைடில் உள்ள பெரிய ரூமை எடுத்து கொள்வதாக, ஏதேனும் ஒரு வாரம் நீங்கள் யாரும் ஆண் போட்டியாளர்களை நாமினேட் செய்ய கூடாது என்கிற நிபந்தனையோடு விட்டுக்கொடுக்கிறார்கள். இதை தொடர்ந்து பிக்பாஸ் 106 நாட்களுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என இரண்டு பாகமாக வீடு பிரிக்கப்பட்டது என்பதை தெரிவித்துள்ளார்.
உங்க ஷோவில் எனக்கு சான்ஸ் கிடைக்கல! விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்; ஷாக் ஆன தீபக்

Latest Videos

click me!