இந்நிலையில் தன்னுடைய திரைப்பட பணிகள் அதிகமாக இருப்பதால் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னால் பங்கேற்க முடியாது என்றும், ஆனால் இதை தலைமையேற்று நடத்தும் நபருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் உலகநாயகன் கமல்ஹாசன் அண்மையில் பேசியிருந்தார். இந்த சூழலில் தான் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக தகவல்கள் வெளியானது. அது குறித்து வெளியான ப்ரோமோ மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பேசப்பட்டது.