Bigg Boss Tamil Season 8 : பவுண்டரி லைனை தாண்டி முன்னுக்கு வாங்க, அருண் பிரசாத்துக்கு மக்கள் செல்வன் அட்வைஸ்!

First Published | Oct 6, 2024, 11:05 PM IST

Bigg Boss Tamil Season 8, Arun Prasath: பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகர் அருண் பிரசாத், பிக்பாஸ் தமிழ் சீசன் 8-ல் 12வது போட்டியாளராக களமிறங்கியுள்ளார். விஜய் சேதுபதியால் அறிமுகப்படுத்தப்பட்ட அருண், தனது திரைப்பயணம், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கான காரணம் குறித்து பகிர்ந்து கொண்டார்.

Bigg Boss Tamil Season 8, Arun Prasath

Bigg Boss Tamil Season 8 Contestant Arun Prasath : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 ரியாலிட்டி ஷோவில் 12 ஆவது போட்டியாளராக நடிகர் அருண் பிரசாத் எண்ட்ரி கொடுத்தார். தமிழகத்தில் சேலத்தில் 1991 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தார். பிரவீன் பென்னட் இயக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கைப்போடு போட்ட சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலின் முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் அருண் பிரசாத். அதில் மருத்துவராக நடித்திருந்தார். இதுதவிர மேயாத மான் போன்ற படங்களிலும் நடித்துள்ள இவர், கடந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலை தட்டிச் சென்ற அர்ச்சனாவின் காதலன் என கிசுகிசுக்களும் உலா வந்தன.

Arun Prasath Short Films

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் 12ஆவது போட்டியாளராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சி குறித்து அருண் பிரசாத் கூறியிருப்பதாவது: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியாக பார்த்திருப்பீங்க. சிறுவயது முதலே நடிப்பு மீது அதிக ஆர்வமும், ஆசையும் இருந்தது. இதற்காக கல்லூரியில் விஸ்காம் படிப்பில் சேர்ந்து சிறு சிறு ஷார்ட்பிலிம் நிறைய பண்ண ஆரம்பித்தேன்.


Actor Arun Prasat, Bigg Boss Tamil Season 8

ஒரு 50க்கு அதிகமான ஷார்ட்பிலிம் பண்ணியிருப்பேன். அதன் மூலமாக படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படம் தான் மேயாத மான். அதன் பிறகு வாய்ப்பிற்காக போராடிய நாட்களில் இருந்த போது எனக்கு விஜய் டிவியிலிருந்து அழைப்பு வந்தது. அப்போது முதல் என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. பிக்பாஸ் ஒரு அழகான வாய்ப்பு.

இது ஒரு சமூக பரிசோதனைக்கான வீடு. 100 நாட்கள் செல்போன், சமூக வலைதளம், வெளியுலகம் என்று எதுவுமே இல்லாமல் எப்படி இருக்க போகிறோம் என்று தன்னை தானே சோதித்து பார்த்துக் கொள்ள அழகான வாய்ப்பு கொடுத்திருக்கிறது பிக்பாஸ்.

Bigg Boss Tamil Season 8 Contestant Arun Prasath

ஜெயிப்பதும், தோற்பதும் கிடைக்கும் வாய்ப்பின் 2ஆவது பட்சம். ஆனால், அந்த வீட்டில் எத்தனை நாட்கள் இருக்கிறோமோ அத்தனை நாட்களை மக்களுக்கு எண்டர்டெயின்மெண்ட் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஹவுஸ்மேட்ஸையும் அப்படியே வைத்துக் கொண்டு நானும் அப்படி இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய மைண்ட்செட் என்றார்.

Vijay Sethupathi, Arun Prasath

யார் இந்த அருண் பிரசாத்:

விஸ்காம் படித்துக் கொண்டிருந்த போது குறும்படம் எடுத்து வந்த அருண் பிரசாத் நிகழ் காலம் என்ற குறும்படத்தின் மூலமாக வாழ்க்கையை தொடங்கிய அருண் பிரசாத் அதன் பிறகு நிறைய குறும்படங்களை இயக்கியுள்ளார். மேலும், டிவி நிகழ்ச்சிகளிலும் தோன்றியிருக்கிறார். பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலமாக பிரபலமானார். பகல் கனவு மற்றும் ஏதோ மாயம் செய்தாய் போன்ற குறும்படங்களில் அருண் தனது பன்முகத் திறனை வெளிப்படுத்தினார்.

Makkal Selvan Vijay Sethupathi, Bigg Boss Tamil Season 8

சிறிது நேரம் பேசிய பழகியதால் அருண் பிரசாத்தைப் பற்றி புரிந்து கொண்ட விஜய் சேதுபதி இவ்வளவு தான் லிமிட் என்று குறுகிய லைனுக்குள்ளே வாழ்ந்து வருவதாக கூறிய அவர், பவுண்டரி லைனை உடைத்துவிட்டு முன்னுக்கு வர வேண்டும் என்று அட்வைஸ் கூறி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார். சீரியலில் ஜொலித்த அருண் பிரசாத் பிக்பாஸ் வீட்டிற்குள் 106 நாட்கள் தாக்குப்பிடிப்பாரா? சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவாரா? மக்களின் ஆதரவு அவருக்கு இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…

Latest Videos

click me!