"நடக்குற நல்லத, பேசி கெடுத்துறாதீங்க" சிறப்பாக கலாய்த்து நடிகர் அர்னவை BB வீட்டுக்குள் அனுப்பிய VJS!

First Published | Oct 6, 2024, 11:45 PM IST

Bigg Boss Tamil Season 8 : சின்னத்திரை நாடகங்கள் மூலம் புகழ்பெற்ற நடிகர் அர்னவ், இப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.

Actor Arnav

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் மிகவும் கோலாகலமாக துவங்கி இருக்கிறது. முதல் நாளிலேயே மக்களின் ஏகோபித்த ஆதரவை ஒரு நடுவராக விஜய் சேதுபதி பெற்றிருக்கிறார் என்றால் அது நிச்சயம் மிகையல்ல. காரணம் மக்களோடு அதிக அளவில் நெருங்கி பழகும் வெகு சில நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆகையால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடுவராக பெரிய அளவில் அவருக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"சின்னத்திரையின் செல்லப்பிள்ளை" BB வீட்டில் ஜாலியாக நுழைந்த நடிகர் VJ விஷால்! வாழ்த்திய VJS!

Kamalhaasan

ஏற்கனவே இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பல புதிய முகங்கள் என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், மக்களுக்கு பெரிதும் அறிமுகமான நல்ல பல நடிகர்களும், நடிகைகளும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இணைந்து இருக்கின்றனர். மேலும் இந்த முறை ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்று துவக்கத்திலேயே இரு அணிகளாக 18 போட்டியாளர்களும் பிரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பிரபல நடிகர் ரஞ்சித் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது.


Actor Arnav

இந்த சூழலில் அறந்தாங்கியில் பிறந்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சின்னத்திரை நாடகங்களில் பயணித்து வரும் பிரபல நடிகர் அர்னவ் இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்றிருக்கிறார். கடந்த 2014 முதல் 2015 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான "சக்தி" என்ற நாடகத்தின் மூலம் தான் ஆரியா என்ற கதாபாத்திரத்தில் ஒரு ஆன்ட்டி-ஹீரோவாக தனது கலை பயணத்தை அர்னவ் தொடங்கினார்.

Serial Actor Arnav

அதன் பிறகு "கேளடி கண்மணி", "பிரியசகி", "கல்யாண பரிசு 2", "அழகு" மற்றும் "செல்லமே" உள்ளிட்ட பல நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற அர்னவ். இப்போது தன்னுடைய வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான "சிங்க பெண்ணே" என்கின்ற இணைய தொடரிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Tamil Season 8 : பவுண்டரி லைனை தாண்டி முன்னுக்கு வாங்க, அருண் பிரசாத்துக்கு மக்கள் செல்வன் அட்வைஸ்!

Latest Videos

click me!