முதல் நாளே எலிமினேஷன்; வந்த வேகத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் யார்?

Published : Oct 07, 2024, 07:46 AM IST

First Elimination in Bigg Boss 8 : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் கலந்துகொண்டுள்ள 18 போட்டியாளர்களில் ஒருவர் 24 மணிநேரத்தில் எலிமினேட் செய்யப்படுவார் என விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.

PREV
15
முதல் நாளே எலிமினேஷன்; வந்த வேகத்தில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறும் போட்டியாளர் யார்?
Vijay Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் கோலாகலமாக ஆரம்பமாகி உள்ளது. இம்முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார். நேற்று போட்டியாளர்களின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் 8-வது சீசனில் கலந்துகொள்ள உள்ள 18 போட்டியாளர்கள் யார் யார் என்பது அறிவிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் டம்மி டிராபி ஒன்றை கொடுத்து இறுதியில் அதை கொண்டு வந்தால் ஒரிஜினல் டிராபி கிடைக்கும் என வாழ்த்தி அனுப்பினார் விஜய் சேதுபதி.

25
Bigg Boss Vijay Sethupathi

அந்த வகையில் இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்.ஜே.ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சவுந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் ஆண்கள் 9 பேர், பெண்கள் 9 பேர் என சரிசமமாக உள்ளதால் பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் ஆக இந்த சீசன் மாறி உள்ளது.

இதையும் படியுங்கள்... வீட்டுக்கு நடுவே கோடு போட்டு கொளுத்தி போட்ட பிக்பாஸ்! உள்ளே வந்த வேகத்தில் வெளியே சென்ற 6 போட்டியாளர்கள்!

35
Makkal Selvan Vijay Sethupathi

பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த முதல்நாளே பிக்பாஸ் வீட்டுக்கு நடுவே கோடு போடப்பட்டு, பாய்ஸ் ஒருபுறம், கேர்ள்ஸ் ஒருபுறமும் இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. வழக்கமாக இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் முதல் ஒரு வாரம் ஜாலியாக இருக்கும். சில சமயங்களில் முதல் வாரம் எலிமினேஷனும் இருக்காது. ஆனால் இம்முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு ட்விஸ்டுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது.

45
Bigg Boss Tamil season 8

அந்த வகையில் நேற்று 18 போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பிவிட்ட கையோடு ஒரு குண்டையும் தூக்கிப்போட்டுள்ளார் விஜய் சேதுபதி. அது என்னவென்றால் இன்னும் 24 மணிநேரத்தில் ஒரு நபர் எலிமினேட் செய்யப்பட உள்ளதாக விஜய் சேதுபதி அறிவித்து இருக்கிறார். உள்ளே எண்ட்ரி ஆன ஒரே நாளில் எலிமினேஷனா என போட்டியாளர்கள் மட்டுமின்றி ஆடியன்ஸும் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். பிக்பாஸ் வரலாற்றில் இதுவரை எந்த மொழியிலும் இப்படி ஒரு எலிமினேஷன் நடந்ததில்லை.

55
sachana namidas

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே ஆண் போட்டியாளர்கள், பெண் போட்டியாளர்களிடம் ஒரு நிபந்தனை விதித்தனர். தாங்கள் உங்களுக்கு வசதிகளுடன் கூடிய வீட்டின் ஒரு பகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் ஒரு வாரம் பெண்கள் யாரும் ஆண்களை நாமினேட் செய்யக்கூடாது என கூறினர். அதற்கு பெண்களும் சம்மதம் தெரிவித்ததால் இந்த நிபந்தனையை அவர்கள் நேற்றே பயன்படுத்தி இருப்பதாக தெரிகிறது. அதன்படி பெண் போட்டியளர்களில் ஒருவர் தான் முதல் நாளே எலிமினேட் செய்யப்பட்டு உள்ளாராம். அது சச்சனா நேமிதாஸ் என்றும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இவர் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... உங்க ஷோவில் எனக்கு சான்ஸ் கிடைக்கல! விஜய் சேதுபதி சொன்ன சீக்ரெட்; ஷாக் ஆன தீபக்

Read more Photos on
click me!

Recommended Stories