பிக்பாஸ் ஷூட் முடிந்ததும் BMW காரை பரிசாக கொடுத்த விஜய் சேதுபதி - யாருக்கு தெரியுமா?

Published : Oct 07, 2024, 11:30 AM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, கையோடு புது பிஎம்டபிள்யூ காரை வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார்.

PREV
14
பிக்பாஸ் ஷூட் முடிந்ததும் BMW காரை பரிசாக கொடுத்த விஜய் சேதுபதி - யாருக்கு தெரியுமா?
vijay sethupathi

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார். கைவசம் அரை டஜன் படங்களுடன் நடித்து வரும் இவர், இத்தனை பிசி ஷெட்யூலுக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கிறார். கமல்ஹாசன் அந்நிகழ்ச்சியை விட்டு விலகியதால் அவருக்கு பதில் விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் அறிமுக நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கி இருந்தார் விஜய் சேதுபதி.

24
Vijay Sethupathi gifted BMW car

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஷூட்டிங் முடிந்த கையோடு நடிகர் விஜய் சேதுபதி புது பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். அந்த காரை அவர் பரிசாக கொடுத்தது வேறுயாருக்கும் இல்லை... மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலனுக்கு தான். மகாராஜா படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதமாக அதன் 100வது நாள் விழா நேற்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படியுங்கள்... 24 மணிநேரத்திற்குள்ளாக முதல் எவிக்‌ஷன் – நாமினேஷனை தொடங்கிய ஹவுஸ்மேட்ஸ் – வெளியேறும் அந்த ஒருவர் யார்?

34
Vijay Sethupathi gifted BMW car to Director Nithilan

அப்போது மகாராஜா படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஷீல்டு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தயாரிப்பாளரும், விஜய் சேதுபதியும் சேர்ந்து இயக்குனர் நிதிலனுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கினர். கருப்பு நிற பிஎம்டபிள்யூ கார் முன் அவர்கள் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். மகாராஜா திரைப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது. அப்படம் திரையரங்குகளில் ரூ.110 கோடி வசூலித்திருந்தது.

44
Maharaja Movie

இதையடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி உலகளவில் கவனம் ஈர்த்த மகாராஜா திரைப்படத்தை, இதுவரை நெட்பிளிக்ஸில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்களாம். இப்படத்தின் மூலம் மட்டும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.150 கோடி சம்பாதித்து உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி தியேட்டர் மட்டுமின்றி ஓடிடியிலும் மாஸ் ஹிட் அடித்துள்ள மகாராஜா திரைப்படம் விரைவில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதன் ரீமேக் உரிமையை நடிகர் அமீர்கான் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 24 மணிநேரத்திற்குள்ளாக முதல் எவிக்‌ஷன் – நாமினேஷனை தொடங்கிய ஹவுஸ்மேட்ஸ் – வெளியேறும் அந்த ஒருவர் யார்?

Read more Photos on
click me!

Recommended Stories