விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் சீரியல் நடிகையாக மாறியவர் தொகுப்பாளினி ஜாக்குலின். ரக்ஷனுடன் சேர்ந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன் பின்னர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குனராக அறிமுகமான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக ஜாக்குலின் நடித்திருந்தார். அந்த படம் ஜாக்குலினுக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்த நிலையில், சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
24
Jacquline Serial
விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி BA சீரியலிலும் கதாநாயகியாக ஜாக்குலின் நடித்திருந்த நிலையில், தற்போது தன்னுடைய திரை உலக வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என நம்பி பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கி உள்ளார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியில், திரையுலக பிரபலங்களை விட விஜய் டிவி பிரபலங்கள் அதிகம் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இவருடைய பெயர் பிக் பாஸ் லிஸ்டில் அடிபட்டு வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஜாக்குலின் கலந்து கொண்டுள்ளார்.
மேலும் இந்த முறை ஆட்டமும் புதுசு, ஆளும் புதுசு என்கிற வாசகத்திற்கு ஏற்ப... ஆட்டம் துவங்கிய 24 மணி நேரத்திலேயே, ஒரு போட்டியாளரை வெளியே அனுப்ப முடிவு செய்துள்ளார் பிக் பாஸ். அதன்படி இன்று நடக்கும் நாமினேஷனில் பிரபலங்கள் மாறி மாறி அவர்கள் வெளியே அனுப்ப நினைக்கும் பிரபலத்தின் பெயரை கூறி அதற்கான காரணத்தையும் தெரிவித்து வந்தனர். இது குறித்த ப்ரோமோ முதலில் வெளியானதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஜாக்குலின் மற்ற பெண் போட்டியாளர்கள் முடிவுக்கு உடன் படாமல், தன்னுடைய நிலைப்பாட்டை தீபக், ரவீந்திரன், முத்துக்குமரன், ஆகியோர் முன்பு கெத்தாக பேசி உள்ளார்.
44
Bigg Boss First Day fight
"இந்த புரோமோவில்... நான் என்னுடைய பெட்டை உங்களுக்கு கொடுத்து விடுகிறேன். என்னை நான்கு வாரம் நாமினேட் மட்டும் செய்யாதீர்கள் என ஜாக்குலின் தீபக்கிடம் கூறுகிறார். இதைத்தொடர்ந்து முத்துக்குமரன் நாமினேஷன் ஃப்ரீ என்கிற டீல்க்கு உங்களுக்கு உடன்பாடு இல்லையா? என கேட்க... எல்லோருமே சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் என தீபக் கூற, ரவீந்தர் ஜாக்குலின் முடிவை பரிசீலனை செய்யுமாறு கூறுகிறார். இதை தொடர்ந்து பேசும் ஜாக்குலின் எனக்கு கம்ஃபேட்டான ஆன பெட்டில் படுப்பதை விட, எனக்கு வேண்டும் என நினைக்கும் நபரை தான் நான் நாமினேட் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். இதைத் தொடர்ந்து பேசும் முத்துக்குமார், நீங்கள் உடன்படாத காரணத்தால் 24 மணி நேரத்தில் வெளியேறும் போட்டியாளர் என பிக் பாஸ் கூறினால் ஓகேவா? என கேட்க... அதில் எனக்கு சம்மதம் என கூறி கெத்து காட்டி உள்ளார்.