Published : Oct 07, 2024, 03:55 PM ISTUpdated : Oct 07, 2024, 04:00 PM IST
திரைப்படங்களில் எப்படி சில சகோதர - சகோதரிகள், நடித்து வருகிறார்களோ அதே போல் சில அண்ணன் - தங்கை மற்றும் அக்கா - தம்பிகள் சீரியலிலும் நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்
வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி, பின்னர் சீரியல் மூலம் இல்லத்தரசிகள் மனதை கவர்ந்தவர்கள் தான் சோனியா மற்றும் டிக்கு. சோனியா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மீனா தொடரில் நடித்து வருகிறார். ஆனால் டிக்கு சீரியலில் சம்பாதித்த பணத்தை தொழிலில் முதலீடு செய்து, தன்னுடைய பிஸ்னஸை கவனித்து வருகிறார். இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
27
Devi Kirupa And Siddharth
தேவி கிருபா - சித்தார்த்:
ஆனந்தம் தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகை தேவி கிருபா. இதை தொடர்ந்து மாமா மாப்ள, தென்றல், கல்யாண பரிசு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார். குறிப்பாக தென்றல் தொடரில் புஜ்ஜி என்கிற கதாபாத்திரம் இவரை மிகவும் பிரபலமடைய வைத்தது. இவரை தொடர்ந்து இவருடைய தம்பி சித்தார்த்தும் தெய்வமகள் என்கிற ஒரே ஒரு சீரியலில் மட்டுமே நடித்தார். இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதிலும் சில காரணங்களால் தொடர்ந்து இவரால், சீரியலில் நடிக்க முடியாமல் போனது.
மலையாள நடிகையான மித்ரா குரியன், காவலன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். இதை தொடர்ந்து சாது மிரண்டா, சந்தித்ததும் சிந்தித்தும், நந்தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். சினிமா வாய்ப்பு கிடைக்காத நிலையில் சீரியலில் களமிறங்கினார். தமிழில் பிரியசகி, அழகு போன்ற சீரியல்களில் நடித்தார். இவருடைய தம்பி டானி குரியன் சில மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
47
Sindhu - Sanjeev
சிந்து - சஞ்சீவ்
சிந்து 1990-களில் பட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானவர். திருமணம் ஆன பின்னர் வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குறைந்ததால் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க துவங்கினார். இவரை தொடர்ந்து இவருடைய சகோதரர் சஞ்சீவ் சீரியலில் நடிக்க துவங்கிய நிலையில், பல சீரியல்களில் கதாநாயகனாகவும் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார். குறிப்பாக தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மஹாலட்சுமி சீரியலில் நடித்து வருகிறார். அதே போல் 30-க்கும் மேற்பட்ட படங்களிலும் குணசித்ர வேடத்தில் நடித்துள்ளார்.
சூரிய கிரண் மற்றும் சுஜிதா இருவருமே தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பிரபலமானவர்கள். சூரிய கிரண் சிறிய வயதில் நடிப்பில் கவனம் செலுத்தி இருந்தாலும்.. பின்னர் இயக்குனராக மாறியவர். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரின் தங்கை சுஜிதா சில திரைப்படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்தார். பின்னர் சீரியல்களில் நடிக்க துவங்கினர். இவர் விஜய் டிவியில் நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் மிகவும் பிரபலம்.
67
Aishwarya Rajesh and Manikandan Rajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் - மணிகண்டன் ராஜேஷ்:
ஐஸ்வர்யா ராஜேஷ் வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக இருந்தாலும், இவர் சினிமா கேரியருக்கு பிள்ளையார் சுழி போட்டது என்னவோ சின்னத்திரை மூலம் தான். தொகுப்பாளர், டான்ஸர் என தன்னுடைய கேரியரை டெவலப் செய்து பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கி பல சவால்களை கடந்து சாதித்தார். ஐஸ்வர்யா ராஜேஷை போலவே இவருடைய அண்ணன், மணிகண்டனும் சின்னத்திரையில் தன்னுடைய கேரியரை சீரியல் நடிகராக துவங்கியவர். தற்போது வெள்ளித்திரையில் நடிகராக தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் அக்ஷிதா. இவரை போலவே இவருடைய சகோதரர் அவினாஷும் ஒரு நடிகர் தான். அழகு சீரியலில் அறிமுகமான அவினாஷ் தற்போது.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசல்படி தொடரில் இரண்டாவது நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.