'வாணி ராணி' சீரியல் மூலம் அறிமுகமான நிவேதிதா பங்கஜ், பின்னர் கல்யாண பரிசு, திருமகள், சுந்தரி, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு, 'மகராசி' சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த, எஸ் எஸ் ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.