கிருத்தி ஷெட்டியும் தெலுங்கு நடிகை ஆவார். இவர் கதாநாயகியாக அறிமுகமான உப்பென படம் வணிக ரீதியில் நல்ல வெற்றி பெற்ற படமாக அமைந்து. இவருக்கு நல்ல ஓபனிங் கொடுத்தது.
25
Krithi Shetty
18 வயதான இளம் நடிகையான இவர் சூப்பர் 30, ஷியாம் சிங்க ராய், பங்கர்ராஜூ, போர்வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது 2 தமிழ் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் தமிழ் படம் மற்றும் சூர்யா தற்போது பாலாவுடன் இணைந்துள்ள வணங்கான் உள்ளிட்ட படத்தில் நாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகிறார் கிருத்தி ஷெட்டி.
இதற்கிடையே அவ்வப்போது மிதமான கவர்ச்சியுடன் இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருக்கும். அதன்படி சேலையில் முன்னதாக இவர் வெளியிட்ட புகைப்படத்துடன் "அடக்கம் என்பது உயர்ந்த நேர்த்தியானது" என தலைப்பிட்டு இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூன்று லட்சத்திற்கு அதிகமான லைக்குகளை பெற்றது.
இவர் சமீபத்தில் நடித்த 'தி வாரியர்' ஜூலை 14 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான வரவேற்பை பெற்றது. ராம் போதினேனே நடித்துள்ள இந்த படத்தில் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இதை தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கி இருந்தார்.
தற்போது சிவப்பு வண்ண உடையணிந்து கிக் போஸ் கொடுத்துள்ளார். ஷீவ் லெஸ் மேலாடை மற்றும் முழு நீள பேண்ட் அணிந்து கிருத்தி செட்டி கொடுத்துள்ள போஸ் உடன் "சிறந்த ஸ்டாலின் ரகசியம், நீங்கள் அணிந்திருப்பதை நன்றாக உணர வேண்டும் என தலைப்பிட்டுள்ளார்.