Ramya Pandian: ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் யோகம்..மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோடி...

Published : Jul 17, 2022, 02:49 PM IST

Ramya Pandian: குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ரம்யா பாண்டியனுக்கு தற்போது மலையாள திரையுலகின் மூலம் ஜாக்பாட் யோகம் அடித்துள்ளது. 

PREV
16
Ramya Pandian: ரம்யா பாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட் யோகம்..மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோடி...
Ramya Pandian:

ரம்யா பாண்டியன், டம்மி டப்பாசு படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான் ஜோக்கர் திரைப்படத்தில் சிறப்பான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்த இவருக்கு வெள்ளித்திரை சரியாக கைகொடுக்கவில்லை. 
 

26
Ramya Pandian:


பட வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் போனதால், விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ரம்யாபாண்டியன், குஷி ஜோதிகா பாணியில் இவர் நடத்திய கவர்ச்சியான மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் ஒரே நாளில் பிரபலமானார் . 

36
Ramya Pandian:


இதையடுத்து, குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். அதேபோல எதிர்மறையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். பிக் பாஸ் 4 வது சீசனில் விஷபாட்டில் என்று ரம்யாபாண்டியன் பெயர் சொல்லி அழைக்கப்பட்டார். மீண்டும் ஒருமுறை  பிக் பாஸ்  அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தார்..

மேலும் படிக்க....வைரலாகும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளாமர் லுக்...வர வர கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.? நெட்டிசன்கள் புலம்பல்

46
Ramya Pandian:

விஜய் டிவியில் நடந்த ரியாலிட்டி ஷோக்களின் மூலம் சின்னத்திரையில், புகழின் உச்சத்திற்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கு தமிழில் பட வாய்ப்பு மட்டும் கிடைக்காமல் தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்தார். 

மேலும் படிக்க....வைரலாகும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளாமர் லுக்...வர வர கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.? நெட்டிசன்கள் புலம்பல்

56
Ramya Pandian:

இதையடுத்து, நடிகைகளுக்கு பட வாய்ப்பினை தேடி தரும் ஷார்ட் ரூட்டான இன்ஸ்டாகிராமில் பல்வேறு கவர்ச்சி போட்டோஷூட்கள் நடத்தி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தற்போது இவரின் கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், வேற்று மொழியில் பட வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.

66
Ramya Pandian:

ஆம், தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தின் மூலம் மலையாளம் சினிமாவில் ரம்யா பாண்டியன் கால் பதிக்கிறார். லிஜோ ஜோஸ் இயக்கும் இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாக இணைகிறார். தமிழ் ரசிகர் பட்டாளம் ஏராளம் கொண்ட ரம்யா பாண்டியன் தற்போது முதல் முறையாக வேற்று மொழி படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க....வைரலாகும் கீர்த்தி சுரேஷ் லேட்டஸ்ட் கிளாமர் லுக்...வர வர கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ.? நெட்டிசன்கள் புலம்பல்

Read more Photos on
click me!

Recommended Stories