நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலையில் மிகப்பெரிய கிராமம் போன்ற செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இறுதி கட்டத்தின் நெருங்கி உள்ள இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர் எஸ்எஸ் இன்ஃபோடைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் கௌதம் வாசுதேவன் மேனன் முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு... ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..
மலைவாழ் மக்களுக்கு காவல்துறையால் நேரும் இன்னல்கள் குறித்த கதைக்களமாக இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி இந்த படத்தில் போராளியாக நடிக்கிறார் என்பது அவர் படப்பிடிப்பு இறுதியில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்தது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார்.