இந்நிலைகள் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அடுத்த படத்திலும் கமிட் ஆகிவிட்டார் விக்ரம். முன்னதாக பா ரஞ்சித்துடன் விக்ரம் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருந்தது. சீயான் 61 என்று பெயரிடப்பட்ட படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்ஸ் ட்விட்டரில் நேரலை செய்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு... ஒரு மாதம் கழித்து தி லெஜண்ட் ட்ரைலரை வெளியிட்ட தமன்னா..
இந்த படத்திற்கு பா ரஞ்சத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக இருந்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக இந்த முறை ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சீயான் 61 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணி எனக்கு கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரிஜினல் கேஜிஎப் சுரங்கத்தில் நடத்த குழு திட்டமிட்டுள்ளது.