good luck to Jerry
நெல்சனின் முந்தைய படைப்பான "கோலமாவு கோகிலா" ரசிகர்கள் மத்தியில் வெகுவான பாராட்டுகளை பெற்றது. நயன்தாரா நாயகியாக நடித்திருந்த இந்தப் படம் டார்க் காமெடி திரைப்படமாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
மேலும் செய்திகளுக்கு...விக்ரமனின் கோப்ரா "தரங்கிணி" லிரிக் வீடியோ..வைரலாலும் கேஜிஎப் நாயகியின் சேலை கிளாமர் கிளிப்ஸ்!
நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் உருவான இந்த படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். குடும்ப கஷ்டங்களை தீர்ப்பதற்காக போதை பொருளை கடத்தும் அப்பாவி பெண்ணாக நடித்திருப்பார் நயன்தாரா. படம் வெளிவரும் முன்னரே சிவகார்த்திகேயன் எழுதிய கல்யாண வயசு தான் வந்துடுச்சு பாடல் மூலம் படம் ப்ரொமோட் ஆனாது.
good luck to Jerry
குட் லக் ஜெரி வரும் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நயன்தாராவுடன் தன்னை ஒப்பிடுவது குறித்து ஜான்வி கபூர் கருத்து தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ஜான்விக் கபூர், நயன்தாராவின் ரோல் வேறு தன்னுடைய கதாபாத்திரம் வேறு எனக் கூறியுள்ளார். நயன்தாராவின் ரோல் தான் நடித்த கதாபாத்திரம் போன்றது அல்ல. நான் பஞ்சாபில் வசிக்கும் பிகாரி பெண்ணாக நடித்துள்ளேன். பேசும் விதம் கூட வேறு மாதிரியாக இருக்கும் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அதற்குள் முடிவிற்கு வந்த குஷ்பூவின் சீரியல்...பிரபல தொலைக்காட்சி தொடருக்கு எண்டுகார்ட் போட்டாச்சு
good luck to Jerry
அதோடு தன்னை பிரபல நடிகைகளுடன் ஒப்பிடுவது இது முதல் முறை இல்லை என்றும் தனது நடிப்பில் முதல் படமாக வெளியான தடக் படம் மராட்டிய படமான சாய்ராட் படத்தின் ரீமேக் தான் அப்பொழுது தனது தாயும் சிறந்த நடிகையுமான ஸ்ரீதேவியுடன் தன்னை பலரும் ஒப்பிட்டுப் பேசி இருந்தனர். தான் ஒப்பிடுதலுக்கு நான் பழகிவிட்டேன் என கூறியுள்ளார்.