90களில் கனவு கன்னிகளாக இருந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, பிரபு, கார்த்தி, கமல் என அன்றைய முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். இயக்குனர் சுந்தர் சியை காதல் கரம் பிடித்த பின்னர் கதாநாயகி ரோலுக்கு விடுமுறை விட்டார் குஷ்பூ. இவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்கள், திரைப்பட தயாரிப்பு, சீரியல், அரசியல் என படு பிஸியாக இருக்கிறார்.
24
Kushboo meera serial comes end
வெள்ளித் துறையில் மிளிர்ந்து வந்த குஷ்பூ ஒரு காலகட்டத்திற்கு பின்பு பேக் சின்னத்திரையில் காலடி வைத்தார். நிஜங்கள், லட்சுமி ஸ்டோர்,பேக் டூ ஸ்கூல், நினைத்தாலே இனிக்கும் போன்ற டிவி ஷோக்கலில் தோன்றினார். சமீபத்தில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான மீரா தொடரில் நடித்து வந்தார் குஷ்பூ. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் இவர் தோன்றி வந்தார்.
குடும்பப் பெண்கள் படும் இன்னல்கள் குறித்தான கதைக்களத்தை இந்த சீரியல் கொண்டிருந்தது. பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சியில் கலர்ஸ் தமிழின் மீரா தொடர் ஒளிபரப்பப்பட்டது. மீராவின் ப்ரொமோஷனுக்காக குஷ்பூ முகத்தில் அடிபட்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் உங்களது கணவர் சுந்தர் சி அடித்துவிட்டாரா என்கிற கேள்விகளை எழுப்ப வந்தனர். பின்னர் தான் மீரா என்னும் தொடரில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.
கடந்த மார்ச் 28 முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கணவன் மனைவியின் கசப்பான இனிமையான உறவுகள் குறித்தான கதைக்களம் எபிசோடுகளாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் ஒளிபரப்பான சில மாதங்களுக்கு இந்த நாடகம் முடிவுக்கு வருவதாக குஷ்பூ சமீபத்தில் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ளார் ட்விட்டரில் எல்லா நல்ல விஷயங்களுக்கும் முடிவு வரும் வந்துவிட்டது. நாம் தொடர் விரும்புகிறோம். ஆனால் அதை நீடிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்தேன் நன்றி சொல்ல வேண்டும் கலர்ஸ் தமிழ். எனது குழுவுடன்மீண்டும் வருவோம். அதுவரை பார்த்துக் கொள்வோம் என குறிப்பிட்டு தங்களது புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார் நடிகை குஷ்பூ.