கலவரத்திற்கு மத்தியில் ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் நடத்திய பெண்.. பரபரப்பை ஏற்படுத்திய போட்டோஸ் இதோ!

First Published | Jul 17, 2022, 7:29 AM IST

புரட்சிக்கு இடையில்  ஹசிந்தரா  என்ற ஒரு பெண் சுற்றுலா பயணி போல ஜனாதிபதி மாளிகை  முன் நிற்கும் கார்கள் மற்றும் மாளிகைக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

sri lanka women

மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது இலங்கை. அங்கு உணவு மற்றும் எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதோடு மின்தடை மற்றும் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் எழுபது ஆண்டுகள் இல்லாத மோசமான நிலையை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.

sri lanka women

.இதற்கிடையே பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி கோச்சபய ராஜபக்சே தனது ராஜினாமா கடிதத்தில்  "இலங்கை நெருக்கடியை தவிர்க்க எல்லா நடவடிக்கைகளையும் எடுத்ததாக கூறினார். ஜனாதிபதியின் கடிதம் பாராளுமன்றத்தில் நேற்று வாசிக்கப்பட்டது. அதோடு  மூன்று ஏரிப்பொருள் ஏற்றுமதிகளில்  முதலாவது சனிக்கிழமை கிடைத்ததாக எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விசேஷரா தெரிவித்திருந்தார். 3 வாரங்களுக்கு பிறகு  நாட்டை வந்தடையும் முதல் ஏற்றுமதி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு.. 2022ல் வைரஸ், அடுத்து புயல்தான்..எல்லாமே நடக்குது.! திகில் கிளப்பும் பாபா வாங்கா

Tap to resize

sri lanka women

இலங்கையில் தற்காலிக ஜனாதிபதியாக ரனில் விக்ரமசிங்கே உள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ஜஜித் என நான்கு தலைவர்கள் நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான போட்டியில் இணைந்துள்ளனர். 

மேலும் செய்திகளுக்கு.. coronavirus: Soumya Swaminathan: புதிய கொரோனா அலை: தயாராகுங்கள்: டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை

sri lanka women

இதற்கிடையே ஜனாதிபதி கொட்ச்சபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றதை அடுத்து ஊரடங்கு சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடுமையான பஞ்சம் ஏற்பட்டதால் கோபத்தில் கிளர்ந்து எழுந்துள்ள நாட்டு மக்கள் அங்குள்ள ஜனாதிபதி மாளிகையும் விட்டு வைக்கவில்லை. பல போராட்டக்காரர்கள் அரசாங்க கட்டிடத்திற்குள் நுழைந்து நீச்சல் குளம் மற்றும் அறைகளை ஆக்கிரமித்து இருந்த வீடியோக்கள் மட்டும் போட்டோக்கள் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆகியது.

மேலும் செய்திகளுக்கு.. England PM Election : ரிஷி சுனக் மட்டும் வேண்டாம்! சொந்த கட்சியினரிடம் பரப்புரை செய்யும் போரிஸ் ஜான்சன்!

sri lanka women

இந்நிலையில் மதுஹான்சி ஹசிந்தரா என்ற பெண் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் போட்டோ சூட் எடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புரட்சிக்கு இடையில்  ஹசிந்தரா  என்ற ஒரு பெண் சுற்றுலா பயணி போல ஜனாதிபதி மாளிகை  முன் நிற்கும் கார்கள் மற்றும் மாளிகைக்குள் அமர்ந்தபடி போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள்  பேசும் பொருளாக மாறியுள்ளது

Latest Videos

click me!