பாண்டியன் ஸ்டோர் சீரியலில், சித்ராவின் மறைவிற்கு பின்னர் புதிய முல்லையாக நடித்து வருபவர், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் சிறிய ரோலில் நடித்து வந்த காவியா.
முன்பு இருந்த பாச பிணைப்பு தற்போது சீரியலில் குறைந்தாலும், எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வந்து சீரியலை நாளுக்கு நாள் சுவாரஸ்யப்படுத்தி காட்டுகிறார் இயக்குனர்.
எனினும் அவ்வப்போது மிகவும் வித்தியாசமான கெட்டப்பில், போஸ் கொடுத்து... ரசிகர்கள் மனதை மயக்கி வரும் இவர் யாரும் எதிர்பார்க்காத கெட்டப்புக்கு மாறியுள்ளார்.
மேலும் குடிசை வீடு பக்கத்தில் நின்றபடி பளீச் என இருக்கும் பஞ்சு மிட்டாய் நிற தாவணியில்... கிராமத்து கிளியாகவே மாறி இவர் கொடுத்துள்ள போசுகள் பார்ப்பவர்களை வியப்படைய செய்துள்ளது.
இவரது இந்த கிராமத்து, கெட்டப் கியூட் போட்டோஸ்... சமூக வலைத்தளத்தில் நெட்டிசங்களால் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.