கடந்த சில மாதங்களாகவே, உடல்நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த, பிரபல இயக்குனரும், நடிகருமான பிரதாப் போத்தன் நேற்று காலை காலை 8 மணியளவில் உயிரிழந்த சமபவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குறிப்பாக, நடிகர் கார்த்தி, கமல்ஹாசன், பிரபு, இயக்குனர்கள் மணிரத்னம், சீனு ராமசாமி, ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், ராஜிவ் மேனன், நடிகை கனிகா ஆகியோர் பிரதாப் போத்தன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
இவருடைய மரணத்திற்கு பின்னர், இவரை பற்றியும்... இவரது வாழ்க்கை, குடும்பம் போன்றவற்றை பற்றியும் தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பிரதாப் போத்தனின் மகள் கேயா தன்னுடைய தந்தையை போலவே கலைத்துறையை தேர்வு செய்து அதில் தான் பணியாற்றி வருகிறார்.
மேலும் கேயா தன்னுடைய தந்தையுடன் இருக்கும் சில புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.