முதல் படத்திலேயே இவரது கியூட் நடிப்பு மற்றும் அழகு ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அந்த வகையில், வீரம், மஞ்சப்பை, அதிதி, அரண்மனை 2, என அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புகள் அமைந்தது. குறிப்பாக இவர் சூர்யாவுக்கு மகளாக நடித்த 'மாஸ்' படத்தில் இவரது நடிப்பு அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றது.