கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான கைதி, மாஸ்டர் படங்களின் வெற்றியை அடுத்து உலக நாயகனை இயக்கும் வாய்ப்பை பெற்ற லோகேஷ் 400 கோடிக்கு மேல் வசூலை படைக்கும் புதிய திட்டத்தை ரசிகர்களுக்கு கொடுத்தார். விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா என நட்சத்திர பட்டாளங்களுடன் களமிறங்கிய கமலஹாசனின் விக்ரம் உலக அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.
இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி படங்களில் ஒன்றாக மாறியது. அதோடு கமலின் சிறந்த படங்களில் முதல் இடத்தையும் பிடித்த இது முன்னதாக உலகளவில் 300 கோடி பாக்ஸ் ஆபிஸை பெற்ற நாயகர்களில் ஒருவராக கமலை இடம் பிடிக்க வைத்தது. இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற காமியோவில் தோன்றிய சூர்யா பாராட்டுகளை பெற்றிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு... ஐடி ரெய்டு...சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டான பணம் சிக்கியது! அன்பு செழியனுக்கு நெருக்கடி!