அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கியிருந்த இப்படம் வசூலையும் வாரிக்குவித்தது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையும், சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸும் இப்படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்து வெற்றிக்கு வழிவகுத்தது. இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
24
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் தயாராக உள்ளது. இந்த படத்தை முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக படமாக்க முடிவு செய்துள்ளனர். இதனால் கதையிலும் சில மாற்றங்களை செய்து கூடுதலாக வில்லன் கதாபாத்திரம் ஒன்றை இயக்குனர் சுகுமார் இணைத்து உள்ளதாக கூறப்பட்டது.
மேலும் அந்த வில்லன் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை பிரியாமணி நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதியை போன்ற அவருக்கும் படத்தில் நெகடிவ் ரோல் தான் கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
44
Priyamani
நடிகை பிரியாமணி நடிப்பில் தற்போது கொட்டேஷன் கேங் என்கிற பான் இந்தியா திரைப்படம் தயாராகி வருகிறது. இதுதவிர அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரியாமணி. இந்த படங்களில் நடித்து முடித்த பின்னர் அவர் புஷ்பா 2 படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்திற்காக தேசிய விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.