தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்த இவர், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தேமுதிக எனும் கட்சியைத் தொடங்கினார். சினிமாவைப் போல் அரசியலிலும் அசுர வளர்ச்சி கண்ட விஜயகாந்த், குறுகிய காலத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகும் அளவுக்கு உயர்ந்தார்.
பின்னர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக சினிமாவிலும், அரசியலிலும் இருந்து விலகியே இருந்து வருகிறார் விஜயகாந்த். இதனால் இவரது மனைவி பிரேமலதா கட்சியை கவனித்து வருகிறார். நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகர், சண்முக பாண்டியன் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவருக்கு கடந்த 2019-ம் ஆண்டே கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இளங்கோவன் என்பவரின் மகள் கீர்த்தனாவுடன் திருமணம் நிச்சயம் ஆனது. ஆனால் இவருக்கு இதுவரை நடைபெற வில்லை. இவர்களது திருமணம் தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடி தான் காரணமாம். பிரதமர் மோடி தலைமையில் தான் தனது மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என விஜயகாந்த் ஆசைப்படுகிறாராம்.