கல்யாணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை திவ்யபாரதி - இளைஞர் பரபரப்பு புகார்

First Published | Aug 2, 2022, 11:54 AM IST

யூடியூப் சேனல் நடத்தி வரும் இளைஞர் ஒருவரை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி துணை நடிகை திவ்யபாரதி என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த ஆனந்த்ராஜ் என்பவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அதில் கவிதைகள் தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்துள்ளார். இதில் நடிப்பதற்காக நடிகை ஒருவரை தேடி வந்துள்ளார். அப்போது ஏஜண்ட் ஒருவரின் மூலம் திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பைச் சேர்ந்த திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

திவ்யபாரதி சினிமாவில் துணை நடிகையாக நடித்து வந்துள்ளார், இவர் சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளாராம். இவரை நடிக்க வைத்து கவிதை தொகுப்புகளை இணைத்து தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டு வந்துள்ளார் ஆனந்த்ராஜ். அப்போது இருவருக்கு பழக்கம் ஏற்பட்டு நாளைடைவில் அது காதலாக மாறிவிட்டது.

Tap to resize

ஆனந்த்ராஜ் வீட்டில் திவ்யபாரதியை திருமணம் செய்துவைக்க சம்மதிக்க, ஆனந்த்ராஜிடம் இருந்து மாதந்தோறும் செலவுக்கு ரூ.30 ஆயிரம் வாங்கி வந்துள்ள திவ்ய பாரதி, தனக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மருத்துவ செலவுக்காக ரூ.9 லட்சம் வாங்கி உள்ளார். அதுமட்டுமின்றி ஆனந்த்ராஜை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி 8 பவுன் தங்க நகைகளையும் வாங்கி இருக்கிறார்

இதையும் படியுங்கள்... Non-linear-ல் நான் சீனியர்னு முதல்வரே பாராட்டிட்டாரு! இனி பார்... ப்ளூ சட்டையை மறைமுகமாக எச்சரித்த பார்த்திபன்

ஆனந்த்ராஜ் திருமணம் செய்துகொள்ளலாம் என கூறும்போதெல்லாம் சண்டையிட்டோ, அல்லது ஏதேனும் காரணங்களை கூறியோ முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார் திவ்யபாரதி. இதனால் அவர் மீது ஆனந்த்ராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து திவ்யபாரதி பற்றி விசாரித்துள்ளார் ஆனந்த்ராஜ், அப்போது அவரைப்பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

திவ்யபாரதிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது தெரிந்ததும் மனமுடைந்து போன ஆன்ந்த்ராஜ். திவ்யபாரதி தன்னை ஏமாற்றி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தாடிக்கொம்பு போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... தளபதி 67 அப்டேட்டோட தான் திரும்பி வருவேன் - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்

Latest Videos

click me!