மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் கவனம் பெற்றார். இதையடுத்து இவர் இயக்கிய கைதி திரைப்படம், விஜய்யின் பிகில் படத்துக்கு போட்டியாக வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அவருக்கு அடுத்தாக கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம்.
இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைத்து, வெற்றிகண்ட லோகேஷ், இப்படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பெற்றார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குருவான கமல்ஹாசனுடன் கூட்டணி அமைத்தார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தை சொன்னபடியே செம்ம மாஸாக எடுத்து வெற்றிவாகை சூடினார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்பட வில்லை. விரைவில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, ஷாக்கிங் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் லோகேஷ். அதன்படி, அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் தான் சிறிது இடைவேளை எடுத்துக்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அடுத்த படத்தின் அறிவிப்போடு உங்களை வந்து மீண்டும் சந்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.